| அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை, இன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் பகுதியில் பிற்பகல் 10.21 மணியளவில் நடத்தப்பட்ட இந்த சோதனை மிகவும் திருப்திகரமாக அமைந்ததாக, பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சோதனையின் போது ராணுவத் தளபதி தீபக் கபூரும் உடனிருந்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 290 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை, அணு ஆயுதங்களையும் சுமந்து சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கவல்லது. பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நடந்த தகவலை, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியும், டெல்லியில் செய்தியாளர்களிடம் உறுதி செய்தார். இதற்கு முன கடந்த டிசம்பர் 18 ஆம் தேதியன்று வங்கக்கடலில் உள்ள போர்க் கப்பலில், பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. மும்பைத் தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனை நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. | ||
| (மூலம் - வெப்துனியா) | ||
Best Tamil films
Tuesday, January 20, 2009
பிரம்மோஸ் ஏவுகணை,
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment