Wednesday, December 31, 2008

அதிகாரி தமிழ்ச்செல்வி போலீஸில் புகார்

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில், பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை (பி.டி.ஓ) கன்னத்தில் அறைந்த திமுக ஒன்றிய செயலாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கோலப்போட்டி பொங்கலை முன்னிட்டு நடந்தது. இதில் 50 குழுக்களைச் சேர்ந்த 500 பெண்கள் பங்கேற்றனர்.

விருபாட்சிபுரம் செல்லியம்மன் மகளிர் குழு, முதல்வர் கருணாநிதி படத்துடன் உதயசூரியன் படத்தையும் கோலமாக வரைந்துள்ளனர்.

இதைக்கண்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுமணி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அரசியல் கட்சியின் தேர்தல்சின்னம் வரைய அனுமதிக்கலாமா? என்று பிடிஓ தமிழ்ச்செல்வியிடம் புகார் கூறினார்.

உடனே பிடிஓ தமிழ்ச்செல்வி, அக்கோலத்தை பார்த்து, தமிழக முதல்வர் படம் இருக்கட்டும், தேர்தல் சின்னம் வரையக்கூடாது என்று கூறி அதை அழித்துவிடுமாறு கூறியிருக்கிறார். அதற்கு ரூ.100 செலவானது என்று பெண்கள் கூறவே அதை கொடுத்து விடுகிறேன் என்று அதிகாரி கூறியதும் கோலம் அழிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அணைக் கட்டு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, பிடிஓவை வாய்க்கு வந்தபடி, தரக்குறைவாக பேசியுள்ளார். பின்னர் கோபமாக அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரி தமிழ்ச்செல்வி அப்படியே நிலை குலைந்து போனார். பின்னர் எதுவும் பேசாமல், அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார்.

பாபுவுடன் வந்த அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் தமிழ்ச்செல்வியின் அறைக்குச் சென்று அங்கு இருந்த கம்ப்யூட்டர், டேபிள், சேர், போன்ற பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். கோப்புகளையும் கிழித்து எறிந்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரி தமிழ்ச்செல்வி போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் புகாரை வாங்க மறுத்து விட்டனராம்.

தற்போது மாவட்ட ஊராட்சி திட்ட உதவி அலுவலர் மற்றும் இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

Source: Oneindia

2009ம் ஆண்டு பிறந்துள்ளது.

New Year-2009
டெல்லி: 2009ம் ஆண்டு பிறந்துள்ளது. உலகெங்கும் புத்தாண்டை மக்கள் ஆரவாரத்துடனும், கொண்டாட்டத்துடனும் வரவேற்றனர். தீவிரவாத தாக்குதலுக்கு ஆளான மும்பையில் அமைதியான முறையில் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2008ம் ஆண்டு முடிந்து 2009ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உற்சாகமான கொண்டாட்டங்கள் இடம் பெற்றன.

அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருந்தன.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்டமான வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.

லண்டன் நாடாளுமன்றத்திற்குப் பின்புறம் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது வான வேடிக்கைள் கண்ணைப் பறித்தன.

இந்தியாவில் ...

இந்தியாவிலும் புத்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. அனைத்து முக்கிய நகரங்களிலும் நள்ளிரவு 12 மணிக்கு ஹேப்பி நியூ இயர் கோஷத்துடன் வான வேடிக்கைகள், பட்டாசு வெடிப்புடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான மும்பையில் ஆடம்பரமான விழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. அமைதியான முறையில் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி மீண்ட தாஜ்மஹால் ஹோட்டலில் எளிமையான அதேசமயம், உற்சாகமான புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாஜ் மஹால் ஹோட்டல் அழகிய வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் ...

தமிழகத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டின. சென்னையில் மெரீனா கடற்கரையில் லட்சணக்கானோர் கூடி புத்தாண்டை வரவேற்றனர்.

போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததால் தாறுமாறாக வண்டிகளை ஓட்டி புத்தாண்டு வாழ்த்துச் சொல்வோரின் எண்ணிக்கை அடியோடு குறைந்திருந்தது.

சென்னை நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் நள்ளிரவு 12 மணியளவில் பட்டாசுகள் வெடித்தும், பாடல்களை ஒலித்தும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

தேவாலயங்களில் நள்ளிரவுப் பிரார்த்தனைகள் களை கட்டியிருந்தன.

சில பகுதிகளில் கோவில்களும் திறக்கப்பட்டு புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் புத்தாண்டையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Source: Oneindia

Tuesday, December 30, 2008

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட- தா.பாண்டியன்

மதுரை: திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் சமூக விரோதிகள் இல்லாமல் அமைதியாக நடைபெற வேண்டுமானால், இந்த தொகுதியில் போலீஸ் துறையை தேர்தல் கமிஷன் தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

திருமங்கலம் தொகுதியில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டுள்ளன. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிமுகவினரை தாக்கி விட்டு அவர்கள் மீதே வழக்கும் போட்டுள்ளனர். சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்து உதைத்துக் கொண்டபோது போலீசார் எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களோ, அதைவிட காய்ந்த மரம் போல இங்கே நின்று வேடிக்கை பார்த்திருருக்கிறார்கள்.

தேர்தல் நடக்கும்போது லைசென்ஸ் பெற்ற துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் திருமங்கலம் தொகுதியில் மிசா பாண்டியன் துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கிறார். இது ஆயுத சட்டத்தை மீறிய செயலாகும். அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது சட்ட மீறல்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் சமூக விரோதிகள் இல்லாமல் அமைதியாக நடைபெற தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொகுதியில் போலீஸ் துறையை தேர்தல் கமிஷன் தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை வரவழைக்க வேண்டும்.

திருமங்கலம் தொகுதியில் நாளைக்கே ஓட்டுப்பதிவு நடத்தினாலும் அதை சந்திக்க நாங்கள் தயார். நாங்கள் அனைவரும் பிரசாரத்துக்கு செல்லாமல் இப்படியே வெளியேற தயார். இதற்கு திமுகவினர் தயாரா?.

`ஹாட்ரிக்' வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார்கள். தொடங்கும் போது பேசுகிறவர்கள் தேர்தல் முடிவின் போது பேசுவார்களா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் என்றார் பாண்டியன்.

பேட்டியின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில செயலாளர் பி.வி.கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.

திமுக வன்முறை-மார்க்சிஸ்ட் கண்டனம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருமங்கலம் தொகுதியில் அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் தேர்தல் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அணிக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.

இதனால் ஆத்திரமுற்ற திமுகவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

அதிமுக தேர்தல் அலுவலகங்களை தாக்கியுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் மற்றும் தோழமைக் கட்சிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நியாயமாக தேர்தல் நடைபெற உத்தரவாதம் செய்ய வேண்டுமெனவும், தேர்தல் பார்வையாளர்களிடம் அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயல்குழு கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

Source: Oneindia

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக மத்திய பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா கூறியுள்ளார்.

வங்கதேசம

வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 299 இடங்களில், 225 இடங்களைக் கைப்பற்றி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை

65 தமிழ் இளைஞர்கள் கைது

புதினம் - 21 மணிநேரங்களுக்கு முன்பு
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து இடம்பெற்ற தேடுதலில் 65 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ிஜம்மு காஷ்மீரில்....

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸுடன் இணைந்து தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். .

Wednesday, December 24, 2008

த‌மி‌ழ் எழு‌த்தாள‌ர் மேலா‌ண்மை பொ‌ன்னு‌ச்சா‌மி‌க்கு சாகித்ய அகாடமி விருது

பிரபத‌மி‌ழஎழு‌த்தாள‌ரமேலா‌ண்மபொ‌ன்னு‌ச்சா‌மி‌க்கு 'மின்சார‌ப்பூ' என்ற சிறுகதை தொகுப்பை எழுதியத‌ற்காமத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

webdunia photoFILE
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு பிரபல தமிழ் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி உள்பட 21 படைப்பாளிகள் சாகித்ய அகாடமி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

தமிழில் மேலாண்மை பொன்னுசாமிக்கு அவர் எழுதிய 'மின்சாரப்பூ' என்ற சிறுகதைகளின் தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. அவருக்கு பரிசாக ரூ.50 ஆயிரமும், ஒரு தாமிரப்பத்திரமும் வழங்கப்படும். இந்த விருது வருகிற பிப்ரவரி 17ஆ‌ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மேலாண்மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (59). ஊர் பெயரையும் சேர்த்து மேலாண்மை பொன்னுச்சாமி என அழைக்கப்படுகிறார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை செயலாளராஇவரு‌க்கபொன்னுத்தாய் எ‌ன்மனை‌வியு‌ம், வைகறைசெல்வி, தென்றல் என்ற 2 மகள்களு‌ம், வெண்மணிச்செல்வன் எ‌ன்ற மகனு‌ம் உள்ளனர். 5ஆ‌ம் வகுப்புவரை படித்துள்ள பொ‌ன்னு‌ச்சா‌மி, பலசரக்கு கடை வைத்துள்ளார்.

1972இல் 'செம்மலர்' இதழில் பரிசு என்ற சிறுகதையை முதலில் எழுதினார். இவருடைய 24 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், 5 குறுநாவல்கள், ஒரு கட்டுரை தொகுப்பை எழுதியுள்ளார்.

லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது, அமுதன் அடிகளார் விருது, வடஅமெரிக்க தமிழ்சங்க பேரவை விருது, 5 முறை ஸ்டேட் பாங்க் விருது, 8 முறை இலக்கிய சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். இவர் எழுதிய 'மின்சார பூ' என்ற சிறுகதை தொகுப்பிற்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மேலாண்மை பொன்னுசாமி‌க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலர் என்.வரதராஜன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில தலைவர் அருணன், பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழர் தந்தை ஆதித்தனார் தமிழ் பேரவை தலைவ‌ர் மண‌லி ஏ.கா‌மா‌ட்‌சி பா‌ண்டிய‌ன் ஆ‌கியோ‌ர் வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மேலா‌ண்மை பொ‌ன்னு‌ச்சா‌மியை தவிர 6 கவிஞர்களும், 3 இலக்கிய விமர்சகர்களும் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். மலையாள மொழியில் கே.பி.அப்பன் என்ற மறைந்த இலக்கிய விமர்சகர் இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.பிரபத‌மி‌ழஎழு‌த்தாள‌ரமேலா‌ண்மபொ‌ன்னு‌ச்சா‌மி‌க்கு 'மின்சார‌ப்பூ' என்ற சிறுகதை தொகுப்பை எழுதியத‌ற்காமத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

மேலா‌ண்மை பொ‌ன்னு‌ச்சா‌மியை தவிர 6 கவிஞர்களும், 3 இலக்கிய விமர்சகர்களும் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். மலையாள மொழியில் கே.பி.அப்பன் என்ற மறைந்த இலக்கிய விமர்சகர் இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

Sunday, December 21, 2008

பிரதமர் யூசுப் ராசா கிலானி

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்குமானால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் யூசுப் ராசா கிலானி தெரிவித்துள்ளார்.

கிலானி, பாகிஸ்தான் தேசிய சட்டப் பேரவையில் உரையாற்றுகையில் கூறியதாவாது:-

இந்தியாவுடன் போரில் ஈடுபட பாகிஸ்தான் விரும்பவில்லை. ஆனால், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் அதனை எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

பொறுப்புள்ள நாடாக நடந்துகொள்ளும் பாகிஸ்தான், இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவுள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் ஏழை நாடுகள். வறுமை, நோய், தீவிரவாதம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் இருப்பவை. நாட்டு மக்கள், ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் நாட்டு நலனை பாதுகாக்க ஒருங்கிணைந்து நிற்கிறார்கள். பாகிஸ்தானின் பாதுகாப்பை கட்டிக்காக்க ஒற்றுமையுடன் நாம் இருக்கிறோம்.

பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை அனுமதிப்பது இல்லை என்று அரசு உறுதிபூண்டு உள்ளது. பயங்கரவாதம் நிகழும் போதெல்லாம் அதற்கு நாம் கண்டனம் தெரிவித்துள்ளோம். பயங்கரவாதிகளுக்கு மதமோ, எல்லைகளோ, கொள்கைகளோ கிடையாது.

மும்பை மீது நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எவரும் அந்நிய நாட்டிடம் ஒப்படைக்கப்படமாட்டார்கள் என்றார் கிலானி.

Friday, December 19, 2008

செய்தி, சினிமா, ஆடல், பாடல் அனைத்தினம் கூடல்
Tamilish

Tuesday, December 16, 2008

சுட சுட தமிழ் செய்திகள்

1.பெரம்பலூர், டிச. 16: இந்திய தபால் துறை ஊழியர்கள் வரும் 17ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம.

2. சென்னை: பொங்கல் பண்டிகையின்போது சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவைப்படும் சமையல் பொருட்களை ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கும்படி திமுக உயர்நிலை குழ.

3.சென்னை: வரும் 2010-11ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடையை மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

4.தமிழ்நாடு காவலர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. 

5.    சென்னை அம்பத்தூரில் வீடுகள் இடிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள தமிழக அரசு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

Monday, December 15, 2008

ஈராக்கில் அதிபர் புஷ்

அமெரிக்காவின் அதிபராக ஈராக்கிற்கு கடைசி அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அதிபர் புஷ்ஷின் மீது யாரும் எதிர்பார்த்திராத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவியில் இன்னும் 36 நாட்கள் மட்டுமே நீடிக்க உள்ள ஜார்ஜ் புஷ், நேற்று மதியம் ஈராக் சென்றார்.

பின்னர் அந்நாட்டு அதிபர் ஜலால் தலாபானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர்களை புஷ் சந்தித்தார்.

ஈராக்கில் அமைதி ஏற்படுத்தவும், அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உலக நன்மை கருதியும் அமெரிக்கா போர் தொடுத்ததாக கூறினார்.

செருப்பு வீச்சு: அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு பத்திரிகையாளர் தனது காலணியை சுழற்றி அதிபர் புஷ் மீது வீசினார். இத்தாக்குதலை எதிர்பார்க்காவிட்டாலும் புஷ் சாதுர்யமாக விலகிக் கொண்டார். எனினும் அந்தப் பத்திரிகையாளர் தனது மற்றொரு காலணியையும் சுழற்றி அடித்தார். அதுவும் புஷ் மீது படவில்லை.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்தப் பத்திரிகையாளரை உடனடியாக கைது செய்து வெளியேற்றினர்.

பின்னர் தனது பேச்சைத் தொடர்ந்த புஷ், மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கவே இதுபோன்ற நடவடிக்கையில் அந்தப் பத்திரிகையாளர் ஈடுபட்டுள்ளார். என்னைப் பீதியடையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் நடத்திய இத்தாக்குதலால் நான் வருத்தமடையவில்லை. மேலும் இச்சம்பவத்தை ஆப்கானிஸ்தான் மக்களின் குரலாக தாம் கருதவில்லை என்றார்.

செய்திகள்

1. திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் விஜய டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். தனது தந்தையை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் சிம்ப

2. நெல்லை குறுக்குத்துறையில் நேற்று நடந்த"ரெட்டச்சுழி" சினிமா படப்பிடிப்பில் டைரக்டர் பாலச்சந்தர் மற்றும் பலர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டத.

3. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஆரவாரம் படத்தில இரட்டை வேடத்தில் நடிக்கிரார் ராகவா லாரன்ஸ். 

1. மதுரை: "திருமங்கலம் தொகுதியில் வெற்றி எங்களுக்கே' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.

2. பணிக் காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 87 பேருக்கு பணி நியமன ஆணைகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்

3. வங்கக் கடலில் புதியதாக ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம.

4. டிச-27 அன்று தி.மு.க., பொதுக்குழு கூடுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் , பொருளாளர் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்படுவர்.

5 சென்னை உதவி போலீஸ் கமிஷனர் கடந்த ஆண்டு தாக்கப்பட்டார். இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

6. இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு நகரை நோக்கி நகர்ந்துள்ள இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி்ல் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாக களமுனைத் தகவல்கள்

7. அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்

8.மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து வீட்டுக்கடன் மீதான வட்டியை 8 1/2 சதவீதமாக பொதுத்துறை வங்கிகள் குறைத்துள்ளன.

9. சிங்கப்பூர்: கச்சா எண்ணெயின் விலை ஆசிய சந்தையில் ஒரு டாலர் உயர்ந்துள்ளது

10. இது பாரதிராஜாவின் சீஸன் போலிருக்கிறது. ஒரு பக்கம் அவரது பொம்மலாட்டம் திரைப்படத்தின் இமாலய வெற்றி, மறுபக்கம் இயக்குநர் சங்கத் தேர்தலில் அவருக்குக் கிடைத்திருக்கும்      வெற்ற.

Saturday, December 13, 2008

செயலாளர ராஜினாமா

மந்திரிகள் சமரச முயற்சி
.
Saturday, 13 December, 2008   02:11 PM
.
சென்னை,  டிச. 13: முதல்வர் கருணாநிதியிடம் செயலாளராக பணியாற்றி வந்த சண்முகநாதன் ராஜினாமாவை திரும்ப பெற மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
.
முதல்வர் கருணாநிதியிடம் 40 ஆண்டுகளுக்கு மேலாக உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன், 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

முதல்வரின் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட மோதலே அவருடைய ராஜினாமாவுக்கு காரணம் என்று அரசு வட்டாரத்தில் கூறப்பட்டது.

ராஜினாமாவை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி மூத்த அமைச்சர்கள் சிலர் சண்முகநாதனிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. 4 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டுவிட்டு பணியில் வந்து சேருமாறு அவர்கள் சண்முகநாதனிடம் கூறியதாக தெரிகிறது.

ஆனால், அவர் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தனது மனைவியின் உடல் நலம் குன்றியிருப்பதால், அவருக்கு உதவியாக இருக்க தனக்கு ஓய்வு தேவை என்று சண்முகநாதன் கூறியதாக தெரிகிறது.

சண்முகநாதனின் மனைவி பெங்களூரில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பார்ப்பதற்காக சண்முகநாதன் பெங்களூர் சென்றிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சண்முகநாதனின் ராஜினாமா அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Thursday, December 11, 2008

பாக்.குக்கு ஆதரவு

பாக்.குக்கு ஆதரவு-ஐ.நாவில் முட்டுக்கட்டை போட்ட சீனா
டெல்லி: நான்கு மாதங்களுக்கு முன்பே ஜமாத் உத் தவா அமைப்பைத் தடை செய்ய ஐ.நா.வில் அமெரிக்கா முயன்றபோது, அதற்கு சீனா முட்டுக்கட்டையாக இருந்தது இப்போது வெளியாகியுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த அல் ரஷீத் டிரஸ்ட், அல் அக்தர் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மற்றும் ஜமாத் உத் தவா அமைப்பைச் சேர்ந்த நான்கு நிர்வாகிகள் ஆகியோரை தடை செய்யவும், அவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கவும் தனி நபர் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்தது.

அமெரிக்கா தடை கோரிய நபர்கள் - லஷ்கர் நிறுவனர் ஹபீஸ் சயீத், ஜாகி உர் ரஹ்மான் லக்வி, ஹாஜி முகம்மது அஷ்ரப், மஹமூத் முகம்மது அகமது பாஸிக் ஆகியோர். (இவர்களைத்தான் தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்து, சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்துள்ளது)

இவர்களில் ஹாஜி அஷ்ரப் லஷ்கர் அமைப்பின் நிதிப் பிரிவின் தலைவர் ஆவார். இவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். இவர்தான் லஷ்கர் அமைப்புக்குத் தேவையான நிதியை அள்ளி அள்ளி கொடுப்பவர்.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த அந்த தீர்மானத்தில், இந்த நான்கு பேருடைய சொத்துக்களை முடக்கவும், அவர்களுக்குத் தடை விதிக்கவும், சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கவும் கோரப்பட்டிருந்தது.

ஆனால் இதற்கு பாகிஸ்தான் கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இவர்கள் மீது தடை விதிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது. இந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் களம் இறங்கியது.

பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் என்பதால், அதைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்காக, நான்கு பேரின் பெயர்களையும் தடைப் பட்டியலில் சேர்க்க விடாமல் தடுத்து நிறுத்தி விட்டது சீனா.

இதற்காக அது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. மாறாக, படு டெக்னிக்கலாக, பெயரை மாற்றிக் கொண்டதால் மட்டும் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று கூறி விட முடியாது. அதை நிரூபிக்கும் ஆதாரம் தேவை என்று கூறி அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறாமல் நிறுத்தி விட்டது சீனா.

இதில் என்ன கொடுமை என்றால், ஜமாத் உத் தவா என்று பெயரை மாற்றிக் கொண்ட லஷ்கர் அமைப்பு, சமூக சேவை செய்து வருவதாக பாகிஸ்தான் கூறியதுதான். மேலும் சயீத், லக்வி உள்ளிட்டோர் தொண்டு நிறுவன நிர்வாகிகள் என்றும் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானும், சீனாவும் கூறியுள்ளன.

இப்படி எந்த வகையிலும் தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகள் என்று நிரூபிக்க முடியாத ஒரு காரணத்தை முன வைத்து லஷ்கர் அமைப்பு மீதான தடை மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சயீத் உள்ளிட்டோரை சேர்க்கும் அமெரிக்க முயற்சிக்கு சீனா தடை போட்டு விட்டது.

இதன் விளைவு என்னவென்றால், சயீத்துக்கு பாகிஸ்தான் அரசு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கியதுதான். சமீபத்தில், தனது சொந்த பாதுகாப்புக்காக புல்லட் புரூப் உடைகளை வெளிநாட்டிலிருந்து தருவித்துக் கொள்ள சுங்க வரி விலக்கை சயீத்துக்கு பாகிஸ்தான் அரசு அளித்துள்ளதாம்.

Source: Oneindia
கொள்கைக்காக பதவியை துறந்த வி.பி.சிங்: திருமா
ென்னை: பிற்படு்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக தனது பதவியையே துறந்தவர் முன்னாள் பிரதமர் மறைந்த வி.பி.சிங் என்று விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

அக் கட்சியின் சார்பில் வி.பி.சிங் படத் திறப்பு விழாவும், வீர வணக்க கூட்டமும் நடைபெற்றது.

அதி்ல் திருமாவளவன் பேசுகையில்,

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கொள்கைகளுக்காகவே வாழ்ந்தவர், கொள்கைக்காகவே தன் பதவியை துறந்தவர். வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முயன்றார்.

இதனால் வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் வாங்கியது. இதனால் வி.பி.சிங் பதவி இழக்க நேரிட்டது. ஆனால், அதற்காக அவர் கவலைப்படவில்லை.

தன் பதவி பறிபோகும் என்று தெரிந்தே மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த போராடியவர் வி.பி.சிங். ராஜவம்சத்தில் பிறந்தவர் வி.பி.சிங்.

ராஜவம்சத்தில் பிறந்திருந்தாலும் பெரியார், அம்பேத்கார் போன்றோரின் கொள்கைகளை படித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்காக போராடியவர். ஜனநாயக கொள்கைகளை நடைமுறைப்படுத்த சிறிது காலம் அரசியலை விட்டே விலகி இருந்தவர்.

சமூகத்தில் தகுதியற்றவர்களாக கருதப்பட்ட, ஒடுக்கப்பட்டோரின் நீதிக்காக போராடியதால் தான் அவரை அவரை சமூக நீதிக் காவலர் என்று அழைக்கிறோம் என்றார்.

வி.பி.சிங்கின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து நடிகர் சத்யராஜ் பேசுகையில்,

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தான் ஒடுக்கப்பட்ட மக்களின் வலி தெரியும். ஆனால், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ராஜவம்சத்தில் பிறந்தவர். இருந்தாலும் கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர். இப்படிப்பட்ட மனிதர்களை பார்ப்பதே அபூர்வம் என்றார்.

Source: Oneindia

Wednesday, December 10, 2008

பணியும் பாகிஸ்தான்

பணியும் பாகிஸ்தான்- ஜமாத் உல் தாவாவுக்கு தடை?
Hafiz Muhammad Saeed
டெல்லி: லஷ்கர் இ தொய்பாவின் இன்னொரு முகமான ஜமாத் உல் தாவா அமைப்பை தடை செய்ய வேண்டும், இதுதொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக கண்டிக்க வேண்டும் என ஐ.நா. சபையில் இந்தியா முறையிட்டதன் எதிரொலியாக அந்த அமைப்பை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்லா ஹூசேன் ஹாரூன் கூறுகையில், ஜமாத் உல் தாவா அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்யும் என்று தெரிவித்தார்.

நேற்று ஐ.நா. சபையில் பேசிய மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அகமது, ஜமாத் உல் தாவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுக்கக் கூடாது. இதுகுறித்து ஐ.நா. சபை கடுமையாக கண்டிக்க வேண்டும். அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஐ.நாவின் நடவடிக்கையை தவிர்க்கும் வகையில், பாகி்ஸ்தானே முன்வந்து ஜமாத் உல் தாவாவை தடை செய்ய முடிவு செய்து விட்டது.

இதுகுறித்து ஹாரூன் கூறுகையில், ஜமாத் உல் தாவா அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்யும். அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் மூடப்படும் என்றார்.

லஷ்கர் இ தொய்பாவின் மறு உருவம்தான் ஜமாத் உல் தாவா. லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு 2002ம் ஆண்டு தடை விதித்தது. இதையடுத்து ஜமாத் உல் தாவா என்ற பெயரைப் பயன்படுத்தி லஷ்கர் அமைப்பு இயங்கி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா எழுதிய கடிதத்தில், ஜமாத் உல் தாவா அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்.

அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகம்மது சயீத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Oneindia

தயாராம் பாகிஸ்தான்

போர் திணிக்கப்பட்டால் சந்திக்க தயாராம் பாகிஸ்தான்
Shah Mehmood Qureshiwith Pranab
இஸ்லாமாபாத்: எங்கள் மீது போர் திணிக்கப்பட்டால் அதை சந்திக்க நாங்கள் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூது குரேஷி கூறியுள்ளார்.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் போர் திணிக்கப்படுவதை
விரும்பவில்லை. ஆனால் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டால் அதை சந்திக்க முழு அளவில் தயாராக இருக்கிறோம்.

எங்களது தாயகத்தைக் காக்கும் கடமையும், பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் அன்பையும், நட்பையும் விரும்புகிறோம். இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவுவதை விரும்புகிறோம். ஆனால் அமைதியாகப் போக வேண்டும் என்ற எங்களது நோக்கத்தை பாகிஸ்தானின் பலவீனமாக யாரும் நினைத்து விடக் கூடாது.

யாரையும் ஒப்படைக்க மாட்டோம்:

மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய, எங்களது நாட்டைச் சேர்ந்த யாரையும், இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது. பாகிஸ்தானியர்கள் யாரேனும் மும்பை சம்பவத்தில் தொடர்பு கொண்டிரு்நதால், பாகிஸ்தான் நாட்டுச் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும்.

எங்களது சுதந்திரமான விசாரணையின் அடிப்படையில்தான் தற்போதைய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது.

கைது செய்யப்பட்ட எந்த பாகிஸ்தானியும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படமாட்டார்.

பாகிஸ்தான் மண்ணை யாரும் தீவிராத செயலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதில் பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில்தான், எங்களது உளவு அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் சமீபத்திய கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பாகிஸ்தானிய சட்டப்படி விசாரணை நடைபெறும்.

மும்பை சம்பவத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இந்தியா இதுவரை பதில் எதையும் தெரிவிக்காமல் உள்ளது என்றார் குரேஷி.

முதலில் இந்தியா கோரிய தீவிரவாதிகள் யாரும் பாகிஸ்தானில் இல்லை என்றது அந்நாட்டு அரசு. அடுத்து, பாகிஸ்தானியர்கள் யாருக்கும் மும்பை சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றது. பிறகு ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இல்லை என்றது.

ஆனால் அமெரிக்காவின் கடும் மிரட்டல் மற்றும் ஆதாரங்களை அடுக்கியதைத் தொடர்ந்து அதை ஒத்துக் கொண்டது.

இதையடுத்து மசூத் அஸார், லக்வி ஆகியோரைக் கைது செய்தது. ஆனால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இப்போது கூறுகிறது.

இந்தியாவின் வலியை உணர்வதாக அதிபர் சர்தாரி உருக்கமாக கூறுகிறார். ஆனால் அடுத்த நாளே, கைது செய்த தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்கிறார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்.

பாகிஸ்தானுக்கு இன்னும் எத்தனை முகங்கள் இருக்கிறதோ தெரியவில்லை.

Source: Oneindia

லஷ்கர்-தீவிரவாதிகள்

பாக் நடவடிக்கையால் பாதிப்பில்லை என்கிறது லஷ்கர்-தீவிரவாதிகள் கைது கண் துடைப்பா?
Masood Azar
டெல்லி: பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ள தீவிரவாதிகள் வேட்டையால் எங்களுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை என்று லஷ்கர் இ தொய்பா அமைப்பு கூறியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் நெருக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதிகள் வேட்டையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. முஸாபரபாத்தில் நடத்திய வேட்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் செயல் தலைவரான ஜாகி உர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 20 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல நேற்று ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவரான மெளலானா மசூத் அஸார் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவர் தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது காஷ்மீர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானின் காண்டஹார் நகரில் போய் இந்திய அரசால் இறக்கிவிடப்பட்டவர்.

இதில் லக்வி மற்றும் அஸாரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரியுள்ளது. ஆனால் இருவரையும் ஒப்படைக்க முடியாது. வலுவான ஆதாரங்களை இந்தியாவும், அமெரிக்காவும் முதலில் காட்டட்டும். தேவைப்பட்டால் இங்கு வந்து இவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி தருவோம் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், இந்த கைது நடவடிக்கையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று லஷ்கர் இ தொய்பா கூறியுள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எங்களது செயல்பாடுகளை இந்த கைது நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது.

எங்களது பலம் அசாத்தியமானது. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் நாங்கள் வலுவாக இருக்கிறோம்.

திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். ஒருங்கிணைந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

இவர் சொல்வதையும், பாகிஸ்தான் அரசு கூறிவதையும் வைத்துப் பார்க்கும்போது, தீவிரவாதிகளை வேட்டையாடுவது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சர்வதேச நெருக்குதல், குறிப்பாக அமெரிக்காவுக்கு பயந்து இந்த கண்துடைப்பு கைது நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

Source: Oneindia

கும்பலின் தலைவன் இஸ்மாயில்

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் விவரம் வெளியீடு

Terrorists
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தகவல்களை மும்பை குற்றப் பிரிவு இணை ஆணையர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

யார், யார்?

இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரின் விவரங்கள் வருமாறு ...

படா அப்துல் ரஹ்மான் (முல்தான்), சோட்டா அப்துல் ரஹ்மான் (முல்தான்), பஹாதுல்லா என்கிற அபு பாஹத் (ஓகாரா), இஸ்மாயில் கான் என்கிற அபு இஸ்மாயில் (தேரா), ஜாவேத் என்கிற அபு அலி (ஓகாரா), நஸீர் என்கிற அபு உமர் (பைசலாபாத்), பாபர் இம்ரான் என்கிற அபு அகாஷா (முல்தான்), இன்னொரு நசீர் என்கிற அபு உமர் (பைசாலாபாத்), அஜ்மல் அமீன் கஸாப் (ஓகாரா), சோயீப் என்கிற சொயப் (நரோவால் சியால்கோட்).

இவர்களில் சிலரின் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், சிலரது அடையாள அட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இவர்களில் கஸாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்றவர்கள் கமாண்டோக்களால் கொல்லப்பட்டவர்கள்.

எங்கெங்கு யார் யார் தாக்கியது?

இவர்களில் இஸ்மாயில் கான் மற்றும் கஸாப் சத்ரபதி ஆகியோர் சிவாஜி ரயில் நிலையம் மற்றும் காமா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தினர்.

படா அப்துல் ரஹ்மான், ஜாவேத், சோயப், நஸீர் என்கிற அபு உமர் ஆகியோர் தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர்.

இன்னொரு நஸீர் என்கிற அபு உமர், பாபர் இம்ரான் ஆகிய இருவரும் நாரிமன் ஹவுஸில் தாக்குதல் நடத்தினர்.

சோட்டா அப்துல் ரஹ்மான், பஹாதுல்லா ஆகியோர் டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர்.

இவர்களில் சோயப்புக்கு வயது 20 தான். தீவிரவாதிகளிலேயே இவன்தான் மிகவும் சிறியவன். நஸீர் தான் அதிக வயதானவன். இவனுக்கு வயது 28.

நஸீர் மட்டுமே இந்தக் கும்பலில் திருமணமானவன். ஆனால் இவனது மனைவி, இவனுடன் இல்லை. ஒன்று விவாகரத்து செய்திருக்க வேண்டும் அல்லது இறந்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.

தீவிரவாதிகளின் சராசரி வயது 23 முதல் 25 வயதுக்குள்தான்.

இஸ்மாயில்கான், நசீர், நஸீர் ஆகிய மூன்று பேரும் ஏற்கனவே பல தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்.

கும்பலின் தலைவன் இஸ்மாயில்

இந்தக் கும்பலின் தலைவனாக இஸ்மாயில்கான் செயல்பட்டுள்ளான்.

பயிற்சியின்போது இவர்கள் அனைவருக்கும் வேறு பெயர்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் அடையாளம் காண்பதில் குழ்பம் ஏற்படும் என்பதற்காக இந்த புனை பெயர்கள் தரப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்குள்ளாகவே உண்மையான பெயர்கள் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த புதுப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள நான்கு இடங்களில் இந்தக் கும்பலுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கராச்சியிலிருந்து கிளம்பி மும்பைக்கு வரும் வழியில் கிடைத்த 3 நாட்களில்தான் இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து விரிவாகப் பேசிக் கொண்டுள்ளனர். அப்போதுதான் அவர்களுடைய உண்மையான பெயர்களையும் முதல் முறையாக அறிந்து கொண்டுள்ளனர். தாங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

அஜ்மலுக்கு மட்டும் மூளைச்சலவை

அஜ்மல் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் மூளைச் சலவை தனியாக தரப்பட்டுள்ளது. அதன் பிறகே அவர்களுக்கு ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளைக் கையாளும் பயிற்சி தரப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஜிபிஎஸ் சாதனங்களில் உள்ளவை குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. ஜிபிஎஸ் தவிர ஒரு சாட்டிலைட் போன், 9 செல்போன்களும் தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் ஒரு சிம் கார்டு கொல்கத்தாவில் வாங்கப்பட்டுள்ளது. இவற்றை தீவிரவாதிகள் மும்பையில் பயன்படுத்தியுள்ளனர். மற்ற சிம் கார்டுகள் குறித்த தகவல்களை இப்போது வெளியிடுவதற்கில்லை.

சிம் கார்டுகளை வாங்கிக் கொடுத்தது தொடர்பாக 2 பேரை கொல்கத்தா போலீஸார் கைது செய்துள்ளனர்.

சபாவுதீனையும் விசாரிக்க முடிவு

இவர்கள் தவிர இந்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி. போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த சபாவுதீன் என்ற தீவிரவாதியையும் போலீஸ் கஸ்டடியில் எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார் மரியா.

Source: Oneindia
தலைவன் இருக்கின்றான்: கமல் ஜோடி ஸ்ரேயா
Shreya
தசாவதாரம் படத்துக்குப் பின் கமல் இயக்கி நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி என கூறப்பட்டு வந்த த்ரிஷாவுக்கு மர்மயோகியில் மட்டும் வாய்ப்பளிக்கிறார் கமல்.

தசாவதாரம் படத்துக்கு பின் மர்ம யோகி எனும் படத்தை இயக்கி நடிப்பதாக கமல் அறிவித்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்பதால் இன்றைய நிதி நெருக்கடியில் எடுப்பது சிரமம் என படத்தின் தயாரிப்பாளர் பிரமிட் சாமிநாதன் கூறிவிட்டதால், தற்காலிகமாக படத்தை ஒத்திப்போட்டார் கமல்.

இப்போது தலைவன் இருக்கின்றான் இருபட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்தப் படம் முடியும் முன்பே ஜனவரி அல்லது இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு மர்மயோகியையும் துவங்கும் திட்டமிருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்துக்கு கதாநாயகி தேர்வு பணி கடந்த இரு வாரங்களாக நடந்தது. த்ரிஷா, ஸ்ரேயா பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக ஸ்ரேயாவை தலைவன் இருக்கின்றான் பட கதாநாயகியாக கமல் தேர்வு செய்துள்ளார்.

ஆனாலும் தனது மர்மயோகிக்கு த்ரிஷாதான் நாயகி என்று உறுதி கூறியிருக்கிறாராம். மர்மயோகியில் ஸ்ரேயாவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் ஜோடியாக இவர் நடித்த கந்தசாமி விரைவில் திரைக்கு வருகிறது.

இதைத் தவிர, ஜக்குபாய் படத்திலும் நடிக்கிறார் ஸ்ரேயா.

Source: Oneindia

Tuesday, December 9, 2008

பொன்சேகா திமிர் பேச்சு

டெல்லி: தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவிடம் இந்தியா இன்று கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பொன்சேகா பேச்சுக்கு கோத்தபயா வருத்தம் தெரிவித்தார்.

தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள். அவர்களது பேச்சையெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங் கேட்க மாட்டார் என ராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருந்தார்.

இது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கருணாநிதி, வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியத் துணைத் தூதர் அலோக் பிரசாத் கொழும்பில், பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவை சந்தித்து பொன்சேகா பேச்சுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியுறவு த்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை பாதுகாப்பு செயலாளரிடம், நமது துணைத் தூதர் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்துக் கவனிப்பதாக உறுதியளித்தார். அப்படி ஏதாவது கருத்து வெளிப்படுத்தப்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் கோத்தபயா ராஜபக்சே தெரிவித்தார் என்றார்.

Source: Oneindia

சோனியாவின் 62வது பிறந்த நாள்

சோனியாவின் 62வது பிறந்த நாள் - கொண்டாட்டம் இல்லை
Sonia Gandhi
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 62வது பிறந்த நாள். மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தனது பிறந்த நாளை இன்று சோனியா கொண்டாடவில்லை.

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த அடுத்த நாளான இன்று பிறந்த நாள் வந்திருப்பதால் காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர். இருப்பினும் சோனியா காந்தி கேட்டுக் கொண்டதற்கேற்ப இன்று காங்கிரஸார் யாரும் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.

இருப்பினும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் தன்னை சந்திக்க வந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோரை சந்திக்க சோனியா மறுத்து விட்டார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் சிலருடன் மட்டுமே சோனியா காந்தி பிறந்த நாளை கொண்டாடுவதாக கூறப்பட்டுள்ளது.

1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி இத்தாலியின் டூரின் நகருக்கு அருகே உள்ள ஓவஸாஞ்சோ என்ற இடத்தில் சோனியா காந்தி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா பிறந்த நாள் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், சோனியா காந்தியின் 62வது பிறந்த நாளையொட்டி டெல்லி, ராஜஸ்தான், மிஸோரமில் ஆட்சியை காங்கிரஸுக்குக் கொடுத்து மக்கள் பெரிய பரிசைக் கொடுத்து விட்டனர் என்றார்.

சோனியாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரது ஜன்பத் இல்லத்திற்கு பெரும் திரளான தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இருப்பினும் கொண்டாட்டம் எதுவும் இல்லாததால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Source: Oneindia

கருணாநிதி

ஜெ. ஆட்சியின் ஆட்டத்தை இடதுசாரிகள் மறந்து விட்டனர்: கருணாநிதி
Karunanidhi
சென்னை: திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசும் என்ற குருட்டு நம்பிக்கையில், அதிமுகவுடன் கூட்டணி சேர இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டி போடுகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து முரசொலியில் தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது ..

சட்டசபைத் தேர்தலில் கணிப்புகளைத் தாண்டி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது காங்கிரஸ். சமீபத்திய மும்பை தாக்குதல் சம்பவத்தாலும், விலைவாசி உயர்வாலும் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் மக்கள் அதை நிராகரித்து விட்டனர்.

லோக்சபா தேர்தலுக்கு முன்னோடியாக இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு இருக்கும் என்று கூறப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் என்றனர். ஆனால் ஐந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரஸ் வென்றுள்ளது.

இதன் மூலம் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளில் மக்கள் இன்னும் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது வெளிப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல் முடிவு மதவாத சக்திகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

டெல்லியில் பெரும்பான்மை பலத்துடனும், ராஜஸ்தானில் பாஜகவிடமிருந்து ஆட்சியைப் பறித்தும், மிஸோரமில் சாதனை வெற்றியையும் பதிவு செய்துள்ளது காங்கிரஸ்.

இது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில், திறமையான பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளுக்கு மக்கள் கொடுத்துள்ள பரிசாகும்.

ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலையை வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அந்த அலையை டெல்லியில் வாக்காளர்கள் தோற்கடித்துள்ளனர். 3வது முறையாக அங்கு காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர்.

மக்களின் நலன்களை பார்த்துக் கொள்ளும் அரசை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதே இந்தத் தேர்தலின் முடிவுகள் விளக்குகின்ரன

மும்பைத் தீவிரவாத தாக்குதல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் மக்கள் என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் அதை மக்கள் பொய் என்று நிரூபித்து விட்டனர். இதுபோன்ற நிலைக்கு ஆளுங்கட்சி மட்டுமே காரணம் இல்லை என்பதை மக்கள் தெளிவாக்கியுள்ளனர்.

அதிமுகவின் ஆட்டத்தை மறந்த இடதுசாரிகள்

திமுகத்தில் திமுக நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசும் என்ற குருட்டு நம்பிக்கையில், அதிமுகவுடன் கூட்டணி சேர போட்டி போட்டு போய்க் கொண்டுள்ளன.

கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது அது எப்படியெல்லாம் ஆட்டம் போட்டது என்பதை இந்த கட்சிகள் அனைத்தும் உணர்ந்திருந்தும் கூட, அதிமுகவுடன் கூட்டணி சேர முனைகின்றன. இந்தக் கட்சிகளுக்கெல்லாம் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Source: Oneindia

Google Idea Contest Project 10^100 - Wind Power Breakthrough

Concept:
What if you could convert wind into useable energy or even store it for later use with a device that has no moving parts and greater efficiency than a wind turbine? Click the video to see how.

Overview:
The Wind Snorkel is 30-ft tall column with an aerodynamically design air intake that diverts the prevailing wind into the tapered column which then converts wind (i.e. kinetic energy) into compressed air (i.e. potential energy). By creating a column that gradually increases in size towards the ground the velocity of the airflow drops due to the increase in area. This decreased velocity in turn causes the pressure inside the column to rise (per Bernoullis Law). By the time the airflow reaches the bottom of the column, 90% or more of the kinetic energy has been converted into compressed air, compressed air that can then be used to displace or pump water, generate electricity or be stored for later use, etc.

Using the same aerodynamic principles used in Formula 1 race cars and modern aircraft, the Wind Snorkel provides quiet, safe, reliable operation and runs no matter how hard the wind is blowing. As well, the simple design allows it to fit easily into existing urban or rural environments with minimal impact to the surrounding environment (i.e. wildlife, noise, etc.). And because the Wind Snorkel has no moving parts, its virtually maintenance free, easy to construct and operates at any wind speed.

Manufacture of the Wind Snorkel is similar to that of a flag or utility pole all thats needed is a tapered column made of lightweight, durable material such as steel, plastic, concrete, composites or even wood. And because there's no heavy machinery to mount atop a pole or large lateral forces to contend with, the Wind Snorkel requires a smaller foundation than a typical wind-turbine, dramatically reducing the cost of installation - making it an affordable option for households and developing communities looking to harness wind power for the first time.

Problem to Be Solved:
While wind power is one of the more cost effective sources of renewable energy available, power is generated only when the wind is blowing and storing the energy until it can be used is difficult. As well, turbine efficiency and reliability remain a problem - in practice, few wind turbines are able to achieve better than 40%-50% efficiency and wind power is very capital intensive. As a result, cost per kilowatt remains high. Location as well can be an issue, due to noise associated with rotating turbine blades.

By developing a new class of wind generator that is affordable, quiet, reliable, safe and easy to install, you have the potential to enable distributed-generation of unprecedented scale (imagine, a wind Snorkel for every community or household) along with the tangible benefits that come with distributed energy production: lower prices, reduced transmission and distribution infrastructure, etc.

Benefits:
Given its affordability, ease of construction, virtually anyone would benefit from the development of the Wind Snorkel especially those in rural or developing communities that rely on renewable sources for power.

Globally, we all benefit by having a greener environment and generating clean renewable power, especially if we can generate energy on an unprecedented scale in emerging and developing economies.

Additional Notes:
* Numerous configurations/implementations are possible (e.g. an array of wind snorkels, integration with home and building structures, narrow diameter downpipes, large bell intakes, horizontal orientation, irregular diffuser shapes, etc.).
* Works for any fluid - flowing water for example (e.g. rivers, tides, etc.) - the same principles would apply to a horizontally oriented water diffusion column as they do a wind snorkel.

Google Project 10 ^ 100 - "4th DIMENSIONAL WIRELESS ELECTRICITY"

Saturday, December 6, 2008

தமிழகத்தை நெருங்கும் புயல் சின்னம்-இன்று மாலை முதல் கன மழை
Deep Depression moves towards TN coast
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை முதல் தமிழ கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் எனவும் நாளை கடல் கொந்தளிப்பும், பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழையும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலின் தென் கிழக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 900 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டனத்திற்கு கிழக்கு தென் கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவிலும் அது நிலை கொண்டுள்ளது.

இது மேலும் நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி மேற்கு - வடக்கு நோக்கி நகரும்.

இதன் விளைவாக இன்று இரவு முதல் இந்தப் பகுதிகளில் கன மழை பெய்யும். கூடவே மணிக்கு 70 கிலோமீட்டர் அளவில் காற்றும் வீசக் கூடும்.

நாளை மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்யும். கடல் கொந்தளித்துக் காணப்படும்.

இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குப் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம், நாகையில் புயல் எச்சரிக்கை:

புயல் சின்னம் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், நாகை ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த புயல் சின்னம் புயலாக மாறக் கூடிய என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகமும், புதுச்சேரியும் மீண்டும் ஒரு வெள்ளக்காட்டையும், பெரும் சேதத்தையும் சந்திக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
Source: Oneindia

Wednesday, December 3, 2008

கலைஞர் - மாறன் சகோதரர்கள்

Imageதமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குடுபத்தினருக்கும், மாறன் சகோதரர்கள் குடும்பத்தினருக்குமிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக  நிலவி வந்த குடும்பச் சண்டை முடிவுக்கு வந்துள்ளது.

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி

Imageராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திராவின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இலங்கை தமிழர் பிரச்சனை-

Imageஇலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக  வரும் 4ந் தேதி பிரதமரை சந்திக்க செல்லும்  சர்வகட்சி குழுவில்  அகில இந்திய சமத்துவ  மக்கள் கட்சி சார்பில்  சரத்குமாருக்கு பதிலாக அவரது மனைவியும்,நடிகையுமான ராதிகா இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
 
முதல்வர் கருணாநிதி தலைமையில் 25.11.2008 -ம் தேதி  நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்கள், தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் டிசம்பர் 4-ம் தேதி அன்று டெல்லியில் பிரதமரை சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
.
நடிகர் சரத்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் சினிமா படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். அதனால்  அவர் இந்த சர்வகட்சி குழுவில்  செல்ல இயலாது என்பதால்  அவருக்கு பதிலாக ராதிகா  இடம் பெற்றிருப்பதாக சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
*இலங்கை போரில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தன்னைச் சந்தித்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் .

*மதுரையில் முன் விரோதம் காரணமாக 3 ரவுடிகள் நேற்று மாலை வெட்டி கொலை செய்யப்பட்டனர். இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் கப்பல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அதிலிருந்த 7 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

*மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கூட்டு விசாரணைக் குழுவை அமைக்கலாம் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் யோசனை தெரிவித்துள்ளத  

காண்டலீஸ்ஸா ரைஸ் இன்று இந்தியா வந்தார்.

டெல்லி: மும்பை தாக்குதலையடுத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைஸ் இன்று இந்தியா வந்தார்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தானிடையே ராணுவ மோதல் வரலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது. இதையடுத்து இந்தியாவை சமாதானப்படுத்தவும், இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் உதவுமாறு பாகிஸ்தானுக்கு நெருக்கடி தரவுமே அவர் வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இன்று பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, புதிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இன்னும் தனது பதவியைக் காத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருடன் பேச்சு நடத்தும் அவர் பாகிஸ்தானுக்கும் செல்லலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்காவோ, பாகிஸ்தானோ உறுதி செய்யவில்லை.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மேலும் நெருக்கடி தருவது குறித்து ரைஸிடம் இந்தியா வலுவான கோரிக்கை வைக்கும் எனத் தெரிகிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை மூடுவது, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆகிய விஷயங்களில் அந்த நாட்டுக்கு நெருக்குதல் தருமாறு இந்தியா கோரிக்கை வைக்கவுள்ளது. தனது ஐரோப்பிய பயணத்தை பாதியில் கைவிட்டுவிட்டு ரைஸ் இந்தியா வந்துள்ளார்.

பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்-ரைஸ்:

டெல்லியி்ல நிருபர்களிடம் பேசிய அவர், இது போன்ற தாக்குதல்களில் அல்-கொய்தாவின் கைவரிசை இருக்கலாம். ஆனாலும் விசாரணையை முடிக்காமல் நாம் எந்த முடிவுக்கும் வரக் கூடாது.

இந்த விசாரணைகளில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முழு அளவில் ஒத்துழைப்பு தர வேண்டும். இதை பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தும். இது போன்ற தாக்குதல்களை நாம் எப்பாடுபட்டாவது தடுத்தே ஆக வேண்டும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தருணம் வந்துவிட்டது. இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழுமையாக துணை நிற்கிறது என்றார்.

ஜான் மெக்கெய்ன் பாகிஸ்தான் பயணம்:

இதற்கிடையே அமெரிக்காவின் மூத்த செனட்டரும் ஜனாதிபதி தேர்தலில் ஓபாமாவை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோற்றவருமான ஜான் மெக்கெய்ன் பாகிஸ்தான் செல்கிறார்.

இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பாகிஸ்தான் முழு அளவில் இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மெக்கெய்ன், இல்லாவிட்டால் பாகிஸ்தான் மக்கள் உலக அரங்கில் மேலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானில் அவர் அந் நாட்டு ராணுவத் தலைவர் அஸ்வாக் கியானியையும் சந்திக்கிறார்.
Tags: us, secretary, condoleezza rice, pakistan, india, tension, war, attack, இந்தியா, அமெரிக்கா, காண்டலீஸ்ஸா ரைஸ், தாக்குதல், பாகிஸ்தான், ராணுவம், தீவிரவாதிகள், ஜான் மெக்கெய்ன். தனது ஐரோப்பிய பயணத்தை பாதியில் கைவிட்டுவிட்டு ரைஸ் இந்தியா வந்துள்ளார்.