Thursday, August 14, 2008

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்-ராமதாஸ்
திண்டிவனம்: சோனியா காந்திக்கு இருக்கும் பெருந்தன்மை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் குறித்து முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த வழக்குகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து தகவல் அறிந்ததாகவும் கூறியுள்ளார்.

இதில் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது வியப்பாக உள்ளது. அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டியவர் துணை ஆட்சியராக உள்ள மூத்த அதிகாரி.

அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்ததாக கூறும் முதல்வர், துணை ஆட்சியராக உள்ள உயர் அதிகாரியின் புகாரை நம்பாதது வியப்பாக உள்ளது.

அமைச்சர் சுரேஷ்ராஜன் மீதான விவகாரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மனித உரிமை ஆணையம் மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்திடமும் புகார் செய்த பிறகுதான் காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இப்போது அமைச்சர் சுரேஷ்ராஜன் மீதான வழக்கில் எந்தவித குற்றசாட்டும் இல்லை என்று கூறுகிறார். இது காவல் துறையின் விசாரணைக்கு இடர்பாட்டை ஏற்படுத்தும். இதுதான் நீதியா? தர்மமா?.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீது புகார் கூறுபவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் காவல் துறையினர் விசாரித்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறிக்கையை முதல்வர் விசாரித்து அறிந்ததாகவும், இந்த வழக்கிலும் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறுகிறார்.

முகாந்திரம் உள்ளதா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் விசாரித்து அறிவிக்க வேண்டும். முதல்வர் எப்படி தீர்ப்பு வழங்கலாம்.

அமைச்சர் ராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு ஒரு நீதி, மற்ற அமைச்சர்களுக்கு ஒரு நீதியா அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்தது போல் மற்ற அமைச்சர்களையும் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரையில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

கேள்வி: பாமக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தால் பேசுவோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

ராமதாஸ்: ஜெயலலிதா தனது கருத்தை கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையை ஏற்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி: காங்கிரஸ் தலைமையில் அதிமுக-பாமக மற்றும் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமையுமா?

ராமதாஸ்: தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

கேள்வி: தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இதுவரை இடம் அளிக்கப்படவில்லையே?

ராமதாஸ்: சோனியா காந்திக்கு இருக்கும் பெருந்தன்மை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் அதிக இடத்தில் வெற்றி பெற்ற போதும் அங்கு கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. ஆனால், திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற்றப்பட்டுள்ளது.

இனி கம்யூனிஸ்டுகளும் வெளியேறி, காங்கிரசார் தமிழக அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று வற்புறுத்தும் நிலை வந்தால் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் என்றார்.

Source: Oneindia
நாடு திரும்பினார் 'தங்க மகன்' அபினவ் பிந்த்ரா-உற்சாக வரவேற்பு
Abhinav Bindra with Pratibha Patil
டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று நாட்டு மக்களின் நூற்றாண்டு கனவை நனவாக்கியுள்ள 'தங்க மகன்' அபினவ் பிந்த்ரா இன்று அதிகாலையில் நாடு திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் அபினவ் பிந்த்ரா. இதன் மூலம் 108 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமை பிந்த்ராவுக்குக் கிடைத்துள்ளது.

மேலும், 28 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்துள்ளது.பிந்த்ராவின் இந்த சாதனைக்கு நாடு முழுவதும் பாராட்டும், பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்தப் பின்னணியில் இன்று அதிகாலை டெல்லிக்கு திரும்பினார் பிந்த்ரா. விமான நிலையத்தில் அவருக்கு விளையாட்டுத்துறை அதிகாரிகள், இந்திய துப்பாக்கிச் சுடுதல் பெடரேஷன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிந்த்ராவை அவரது தாயார் பப்லி பிந்த்ரா உச்சி முகர்ந்து வாழ்த்தி வரவேற்றார்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு:

இதையடுத்து அபினவ் தனது பெற்றோருடன் குடியரசு தலைவர் மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்தார். அவரை பிரதிபா கன்னத்தில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.

இதையடு்த்து பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று பிந்த்ரா சந்திக்கிறார்.

இதுகுறித்து அபினவ்வின் தந்தை பிந்த்ரா கூறுகையில், அபினவ்வின் இந்த சாதனை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. நாட்டுக்கு பெருமையை சேர்ந்துள்ளான் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தத்தை தருகிறது என்றார்.

மிட்டல் ரூ. 1.5 கோடி பரிசு:

அபினவ்வின் சாதனையை பாராட்டி அவருக்கு ரூ. 1.5 கோடி பரிசு வழங்குவதாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான லட்சுமி மிட்டல் அறிவித்துள்ளார்.
Source: Oneindia

சுதந்திர தினம்: கருணாநிதி-தலைவர்கள் வாழ்த்து
சென்னை: இந்தியாவின் 61வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து ெதரிவித்துள்ளனர்.

இந்தியாவின் 61வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் நாசகார சக்திகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதோடு, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், பெற்ற சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்பதை நமக்கு இந்த சுதந்திர திருநாள் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த உணர்வோடு தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜக தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தேமுதிக தலைவர் விஜய காந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Source: Oneindia

Wednesday, August 13, 2008

Google Groups

Subscribe to Any to rent

Email:

Visit this group

Google Groups

Any to rent

Visit this group
பாமக, கம்யூ. முன்வந்தால் கூட்டணிக்குத் தயார் - ஜெ.
Jayalalitha
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிக்கு முன்வந்தால் பேச்சுவார்த்தைக்கு அதிமுக தயாராகவே இருக்கிறது. விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களுடன் கூட்டணி குறித்து அவர்கள்தான் கூற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் நான்கு மாதம் ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதா சமீபத்தில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை அவர் கட்சி தலைமையகத்தில் கூட்டினார்.

இதில் அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை ஜெயலலிதா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து இன்று விவாதிக்கப்பட்டது.

செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும் மற்றும் அதிமுக செயல்படும் பிற மாநிலங்களில் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, இனிப்புகள் வழங்குவது, கூட்டங்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் நான் இருந்தாலதான் அரசியலில் ஈடுபடுவது போலவும், வேறு எங்கேயாவது தங்கினால் ஓய்வு எடுப்பது போலவும் கூறுவது பொருத்தமானதல்ல.

கடந்த நான்கு மாத காலமாக நான் எங்கேயும் போய் விடவில்லை. தமிழகத்தில்தான் இருந்தேன். அங்கிருந்தபடியே அரசியல்நடப்புகளை கூர்ந்து கவனித்து, அரசியல் நடத்திக் கொண்டிருந்தேன்.

அரசியல் பணி, கட்சிப் பணி ஆற்றினேன். அறிக்கைககள் மூலம் நாட்டு நடப்புகளில் எனதுகருத்துக்களை தெரிவித்து வந்தேன். ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் அறிவித்தேன். தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் எங்கிருந்தும் அரசியல் நடத்தலாம்.

எந்தக் கூட்டணியிலும் அதிமுக இல்லை:

தற்போது அதிமுக எந்தக் கூட்டணியிலும் இல்லை. கூட்டணி தொடர்பாக எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. கூட்டணி என்பது தேர்தலுக்கு முன்பாகத்தான் முடிவுசெய்யப்படும்.

நாங்கள் கூட்டணிக்குத் தயாராகவே இருக்கிறோம். அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.

பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஏன் கூட்டணி அமைக்க முடியாது. நேரம் வரும்போது நட்பு கட்சிகள், ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச அதிமுக தயாராகவே உள்ளது.

விஜயகாந்த் கட்சியுன் கூட்டணி குறித்து பேசுவது குறித்து பதில் கூற விரும்பவில்லை. அதிமுகவுடன் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்டவர்கள் இணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் கேட்கட்டும்.

பாஜகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு இப்போது சூழல் எழவில்லை என்றார் ஜெயலலிதா.

மாயாவதி பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது போல உங்களிடம் அப்படிப்பட்ட எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. விவசாயிகள், நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கடுமையான மின் தட்டுப்பாடு, மாநில பொருளாதாரம் சீர்கேடு அடைந்துள்ளது.

இவற்றையெல்லாம் அகற்ற, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு என்னிடம் உள்ள ஒரே எண்ணம் என்றார்.

ஓகனேக்கல் குறித்து கேட்டபோது, ஓகனேக்கல் விவகாரத்தில் மீண்டும் சர்வே நடத்த வேண்டும் என கர்நாடக முதல்வர் கூறியுள்ளதை ஏற்க முடியாது. மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோதே தேவையான அளவைகள் நடத்தப்பட்டுள்ளன. ஓகனேக்கல் தமிழகத்தின் ஒரு பகுதி என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான அனுமதி எல்லாம் பெறப்பட்டு விட்டது. கர்நாடகம் இதில் தலையிட அந்த அதிகாரமும், உரிமையும் இல்லை. தமிழக அரசு இந்த விஷயத்தில் உறுதியாக, தைரியமாக இருந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் கருத்தோடு இணைந்து அதிமுக செயல்பட்டதில் எந்த விசேஷ காரணமும் இல்லை. தேசிய அளவில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், தேச நலனுக்கு உகந்த முடிவைத்தான் அதிமுகவும் நானும் எடுத்திருக்கிறோம். இது தற்செயலாக நிகழ்ந்த ஒற்றுமை.

காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டணி சேர்ந்த கம்யூனிஸ்டுகளால் ஏன் எங்களுடன் இணைந்து செயல்பட முடியாது என்றார் ஜெயலலிதா.

சிரஞ்சீவியும் அரசியலுக்கு வருகிறாரே என்ற கேள்விக்கு இதுவரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட வியாதி தற்போது ஆந்திராவுக்கும் பரவியுள்ளது என்றார் ஜெயலலிதா.

கட்சி அலுவலகத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதா வந்ததால் பெருமளவிலான அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு தடபுடலான வரவேற்பை அளித்தனர்.

Source: Oneindia
நாடு திரும்பினார் 'தங்க மகன்' அபினவ் பிந்த்ரா - உற்சாக வரவேற்பு
டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று நாட்டு மக்களின் நூற்றாண்டு கனவை நனவாக்கியுள்ள 'தங்க மகன்' அபினவ் பிந்த்ரா இன்று அதிகாலையில் நாடு திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் அபினவ் பிந்த்ரா. இதன் மூலம் 108 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமை பிந்த்ராவுக்குக் கிடைத்துள்ளது.

மேலும், 28 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்துள்ளது.பிந்த்ராவின் இந்த சாதனைக்கு நாடு முழுவதும் பாராட்டும், பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்தப் பின்னணியில் இன்று அதிகாலை டெல்லிக்கு திரும்பினார் பிந்த்ரா. விமான நிலையத்தில் அவருக்கு விளையாட்டுத்துறை அதிகாரிகள், இந்திய துப்பாக்கிச் சுடுதல் பெடரேஷன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிந்த்ராவை அவரது தாயார் பப்லி பிந்த்ரா உச்சி முகர்ந்து வாழ்த்தி வரவேற்றார். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இன்று பிந்த்ரா சந்தித்து பதக்கத்தைக் காட்டி வாழ்த்து பெறவுள்ளார்.

இருப்பினும், டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு அளிக்கப்பட்டதைப் போல தடபுடலான வரவேற்பு பிந்த்ராவுக்கு அளிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

Source: Oneindia
மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு-சம்பள கமிஷன் அறிக்கைக்கு இன்று ஒப்புதல்
டெல்லி: ராணுவம், கடற்படை, விமானப் படை, பாதுகாப்புப் படைகள் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட 6வது சம்பள கமிஷன் சில மாதங்களுக்கு முன் தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

ஆனால், அதில் கூறப்பட்ட ஊதிய உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்ததால், குறிப்பாக ராணுவத்துறை, அது குறித்து ஆராய மத்திய கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவும் தனது பரிந்துரையை மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்பித்தது.

இந் நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், ஊதியக் குழு மற்றும் கே.எம்.சந்திரசேகர் குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 6வது சம்பள கமிஷனின் அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கு சம்பள கமிஷன் சிபாரிசு செய்ததை விட அதிகமாக ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஊதிய உயர்வால் 54 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பலனடையவுள்ளனர். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரையால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 4,000 கோடி செலவு பிடிக்கும் எனத் தெரிகிறது.

இந்த ஊதிய உயர்வு 2006ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் அரியர்ஸ் (நிலுவைத் தொகை) கிடைக்கவுள்ளது.

Source: Oneindia
சென்னை-ரூ.230 கோடியில் இடிஏ ஸ்டார் குடியிருப்பு
சென்னை: துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் பிராப்பர்டீஸ் நிறுவனம் சென்னையில் ரூ.230 கோடி செலவில் இடிஏ ஸ்டார் ரோஸ்டேல் என்ற பிரம்மாண்ட குடியிருப்புத் திட்டத்தை அமைக்கவுள்ளது.

சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் அமைய உள்ள இக் குடியிருப்பில் அமையவிருக்கும் ஒரு ஃப்ளாட்டின் விலை ரூ. 30 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை இருக்கும் என்று அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து துவங்கப்பட உள்ளன.

இத்தகவலை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சையது இஸ்மாயில் தெரிவித்தார்.

மொத்தம் 6.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த குடியிருப்பின் கட்டுமானப் பணிகள் அமைய உள்ளது.

வீடுகளின் அளவுகள் குறைந்தது 785 சதுர அடி முதல் 1753 சதுர அடிவரை அமைக்கப்பட உள்ளன. இதில் ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீடுகளும் அடக்கம்.

Source: Oneindia
சென்னை-ரூ.100 கோடியில் அதிநவீன நூலகம்-முதல்வர் அடிக்கல்
சென்னை: சர்வதேச தரத்துடன் ரூ.100 கோடி மதிப்பில் அதிநவீன நூலகம் சென்னையில் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா 16ம் தேதி நடக்கிறது. முதல்வர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கன்னிமாரா நூலகம் தற்போது மைய நூலகமாக செயல்பட்டு வருகிறது. ரூ.100 கோடி செலவில் சர்வதேச தரத்துடன் புதிய நூலகம் கட்டப்படுகிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் இந்த நூலகம் அமைய உள்ளது.

இது ஆசியாவிலேயே 2வது பெரிய நூலகமாகும். புதிய நூலக அடிக்கல் நாட்டு விழா வரும் 16ம் தேதி மாலை நடக்கிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.

தகவல் தொழில் நுட்ப பூங்காவை போல இந்த நூலகம் 8 அடுக்கு மாடி கட்டடமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 2,500 பேர் அமரும் வகையில் பிரமாண்டமான ஆடிட்டோரியம், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என தனித் தனியாக அமர்ந்து படிக்கும் வசதியுடன் இந்த நூலகம் அமைக்கப்படுகிறது.

அனைத்து தளங்களிலும் இன்நெட் வசதி வழங்கப்படுகிறது. 10 லட்சம் புத்தகங்கள் வைக்க கூடிய அளவுக்கு கட்டமைப்பு இருக்கும். இந்த ஆண்டில் தொடங்கும் இதன் கட்டுமான பணி அடுத்த 18 மாதத்தில் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Oneindia
சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்க பரிந்துரை!
Rippon Building
சென்னை: இந்தியாவின் நான்காவது பெருநகரமான சென்னை மாநகராட்சி, மக்கள் தொகை மற்றும் அளவில் பெருத்துப் போயுள்ளதைத் தொடர்ந்து நெருக்கடியையும், நிர்வாக சிரமத்தையும் குறைக்கும் வகையில் 3 ஆக பிரிக்கலாம் என அரசுக்குப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த சூசகத் தகவலை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மாநகராட்சி விழா ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்கலாம் என அரசு நியமித்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, தெற்கே தாம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியும், வடக்கே அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இன்னொரு மாநகராட்சியும் உருவாக்கப்படலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பெருகி வரும் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி மற்றும் மக்கள் நெருக்கத்ைத அடிப்படையாகக் கொண்டு இந்த பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன.

இந்தப் பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. 2011ம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.

சென்னை மாநகராட்சி 1688ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான நகராட்சி நிர்வாகம் சென்னைதான்.

1607ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கிழக்கு இந்தியக் கம்பெனியினர் மெட்ராஸ் என்று அப்போது அழைக்கப்பட்ட சென்னை நகரத்தை நிர்மானித்து அறிவிக்கை வெளியிட்டனர். அப்போது 33 வார்டுகளாக சென்னை மாநகரத்தைப் பிரித்தனர். தற்போது சென்னை மாநகராட்சியில் 155 வார்டுகள் உள்ளன.

1921ம் ஆண்டு சென்னை நகரின் மக்கள் தொகை 5 லட்சம்தான். தற்போது கிட்டத்தட்ட 50 லட்சத்தைத் தாண்டி விட்டது.

சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 1921ம் ஆண்டு 27.6 சதுர மைல்களாக இருந்தது. தற்போது 174 சதுர கிலோமீட்டர்களாக வியாபித்துள்ளது.

Source: Oneindia

Tuesday, August 12, 2008

குவியும் பாராட்டுகள்-பரிசுகள்: அபினவ் வியப்பு
Abhinav Bindra
டெல்லி: நான் தங்கப் பதக்கம் வென்றது குறித்து குவியும் பாராட்டுகளும், பரிசு அறிவிப்புகளும் என்னை வியப்படைய வைத்துள்ளது. இத்தனை பாராட்டுக்கள் குவிந்தாலும், என் மீது நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியுள்ள போதிலும் இன்னும் நான் அதே அபினவ் பிந்த்ராதான். என்னுள் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை என்று படு அடக்கமாக கூறுகிறார் 'தங்கமகன்' அபினவ் பிந்த்ரா.

ஒலிம்பிக்கில் இந்தியாவின் 108 ஆண்டு கால கனவை நனவாக்கும் வகையில், தனி நபர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள அபினவ் பிந்த்ரா, தங்கம் வென்ற அடுத்த நாள் தனது பிளாக்கில் மனம் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் நான் மாபெரும் சாதனையை நிகழ்த்தி விட்டதாக அனைவரும் சொல்கிறார்கள். நானும் அதை உணர்கிறேன். இருப்பினும், இந்த அளவுக்கு என்னைப் பாராட்டுவதும், நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருப்பதும் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உண்மையைச் சொல்வதாக இருந்தால், நான் மாறவில்லை. இன்னும் அதே அபினவ்தான். போட்டிக்கு முதல் நாள் ஒலிம்பிக் கிராமத்தில், எனது அறையில் தனிமையில் உலவிக் கொண்டிருந்த அதே அபினவ்தான்.

வெளிப்படையாக சொல்வதாக இருந்தால், இந்த பாராட்டுக்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன. எனது சாதனைகளை சத்தம் போட்டுச் சொல்வது எனக்குப் பிடிக்காத ஒன்று. அதற்காக இது எனது வாழ்க்கையில் மிகப் பெரிய அனுபவம், தருணம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை.

என்னைப் பொருத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதுதான் எனது வாழ்க்கையாக இருந்தது. உண்மையில், 10 மீட்டர் தொலைக்குள்தான் எனது வாழ்க்கையே இருந்தது. எனது வீட்டில் எனது வசதிக்காகவும், பயிற்சிக்காகவும் சொந்தமாக ஒரு ஷூட்டிங் ரேஞ்சையே அமைத்துக் கொண்டேன். எனக்கு கவனச் சிதறல் பிடிக்காது. எனவேதான் எனது வீட்டுக்குள்ளேயே பயிற்சி ரேஞ்சை அமைத்துக் கொண்டேன். எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது பயிற்சி மேற்கொண்டேன். அது இன்றைக்கு பலன் கொடுத்துள்ளது. இல்லையா?

இன்னும் நிறைய சொல்ல விரும்புகிறேன். இந்த உணர்வுகள் எல்லாம் சற்று அடங்கட்டும். அப்போது இன்னும் நிறைய சொல்கிறேன். நான் தங்கப் பதக்கம் வென்ற பின்னர் என்னை மீடியாக்கள் சுற்றத் தொடங்கின. ஆனால் நான் தப்பித்து விட்டேன். எனக்குக் கிடைத்துள்ள இந்த புதிய அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எனது நண்பர்களுடன் அருமையான டின்னருக்கு தயாராகி வருகிறேன்.

இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள அனைவருமே பல ஆண்டு உழைப்பை இங்கு வியர்வையாக கொட்டிக் கொண்டுள்ளனர் என்பதை இந்திய மக்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர்கள் அனைவரையும் இந்திய மக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும்.

நமது சாதனைக்காக மகிழ்வதும், கொண்டாடுவதும் ஓ.கே. ஆனால் அதே சமயத்தில், அனைவரும் அதேபோன்ற சாதனையை படைக்க ஆதரவு காட்ட மறக்காமல் இருப்பதும் அவசியம். நாம் சாதனை படைக்க தவறும்போதும் அதே அளவிலான ஆதரவு இருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் விளையாட்டுத் திறமையை மதிப்பட சரியான அளவுகோல் ஒலிம்பிக் போட்டிதான்.

எனவே நமது நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அரசும், தனியார் நிறுவனங்களும் நல்லாதரவு தர வேண்டும். எனது வெற்றிக்காக நாடு கொண்டாட்டத்தில் ஆழ்ந்ததும், மகிழ்ச்சியில் மூழ்கியதும் என்னை நெகிழ வைத்து விட்டது. இந்த வெற்றிகள் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நமது திறமைகள், நமது மக்களின் ஆதரவு ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தியா உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு சக்தியாக உருவெடுக்கும் என திடமாக நம்புகிறேன். ஆனால் அதற்கு முறையான அமைப்பு வேண்டும். நல்ல பயிற்சி, ஆதரவு வேண்டும்.

என்னால் முடிந்தவரை அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க நான் முயற்சிப்பேன். அதேபோல ஒவ்வொரு இந்தியரும், நமது நாட்டு விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்க முயற்சிக்க வேண்டும். அதில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் பிந்த்ரா.

மிகப் பெரிய சாதனையைச் செய்துள்ள போதிலும் கூட தனது அடக்கம் மாறாமல் அபினவ் பேசுவதுதான், அவர் வென்ற தங்கத்தை விட மிகப் பெரிய பொக்கிஷம், இல்லையா?

Source: Oneindia
தடை செய்யப்பட்ட வன பகுதியில் 'வைர வேட்டை'-2 பேர் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் வைரத்தை தேடிச் சென்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பல அபூர்வமான விலை உயர்ந்த மரங்களும், வன விலங்குகளும் உள்ளன. இதனால் அப்பகுதியி்ல பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள் பல ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்ததாகவும், அந்த மரங்கள் தற்போது வைரமாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தடையை மீறி அப்பகுதிக்குள் செல்ல அடிக்கடி சிலர் முயன்று வருகின்றனர்.

இந் நிலையில் அந்த பகுதியில் இருவர் நுழைந்தபோது, வனத்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் மரங்கள் புதைந்துள்ள பகுதியில் மண்ணை தோண்டியபோது வனத்துறை போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் நகை கடை ஊழியர்கள் கிருஷ்ணன், சுந்தரேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் பலர் வைர வேட்டையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Source: Oneindia
ூட்டணியில் தொடர இடதுசாரிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்
Karunanidhi
சென்னை: மத்தியில் காங்கிரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட்டுகள் பிரிந்து செல்லக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என இரு இடதுசாரிக் கட்சிகளும் திமுகவுக்கு எச்சரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார் கருணாநிதி.

முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற உரைகள் மற்றும் மீசை முளைத்த வயதில் ஆங்கில மொழியாக்க நூல் ஆகியவற்றின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அதில் கருணாநிதி பேசியதாவது:

அறிஞர் அண்ணாவையும் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் எம்.கல்யாணசுந்தரத்தையும் அழைத்து குளித்தலையில் 'கடைசி வேண்டுகோள்' என்ற தலைப்பிலே நங்கவரம் ஜமீன்தாரருக்கு எதிராக ஒரு போராட்ட பொதுக் கூட்டத்தை நடத்தி, உடனடியாக நீங்கள் விவசாயிகளுடைய கோரிக்கைக்கு இணங்காவிட்டால், போராட்டத்தை சந்திக்க வேண்டுமென்று பேசி, நாள்தோறும் அங்கே ஊர்வலங்கள் நடத்தி, அதன் பிறகு நங்கவரம் விவசாயிகளுக்கு நன்மை கிடைத்தது, அவர்களுடைய கோரிக்கை வென்றது. இது தான் நங்கவரம் போராட்டம்.

நாடு பாதி, நங்கவரம் பாதி என்று நங்கவரம் ஜமீன்தாருக்கு ஒரு பட்டமே உண்டு. அந்த நாடு பாதி, நங்கவரம் பாதி என்கிற அந்த பழமொழியையே அழித்துக்காட்டிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டு கட்சி இணைந்த விவசாய போராட்டத்திற்கு உண்டு.

இதை நான் நினைவுபடுத்துவதற்கு காரணம் கம்யூனிஸ்டுகளும், திமுகவினரும்-இரண்டு கட்சிகளும் இரு வேறு லட்சியங்களைக் கொண்டதாக இருந்தாலும், விவசாயிகளை வாழ வைப்பதில், அவர்களுக்காகப் போராடுவதில் ஒரே நோக்கம் தான் எங்கள் இருவருக்கும் இருந்தது என்பதை மறந்து விட்டவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஒருவேளை மறந்து விடுவார்களோ என்று சந்தேகப்பட்டு எச்சரிக்கையாக இப்போது நினைவுபடுத்துவதை என்னுடைய கடமையாக நான் செய்கிறேன். அந்த கடமை நிச்சயமாக நான் செய்து தீர வேண்டிய ஒன்று என்பதால் அதைச் சொல்லுகிறேன்.

சேது சமுத்திர திட்டத்தைப் பற்றி 1971ல் நான் தமிழக சட்டமன்றத்தில் பேசியது உங்கள் நினைவிலே நிற்கப்பட வேண்டியவைகளாகும். அப்போது அந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு 37 கோடி ரூபாய் தான். இப்போது திட்ட மதிப்பு 2,427 கோடி ரூபாய்.

50 ஆண்டுகளுக்கு முன்பே நினைத்த நேரத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றியிருந்தால், இங்கே இருக்கக் கூடிய காங்கிரஸ் நண்பர்கள் யாரும் வருத்தப்படக்கூடாது, அப்போதே இந்த திட்டத்தை நிறைவேற்ற தொடங்கியிருந்தால், ராமர் குறுக்கிடாமல் இருந்திருந்தால், மதவாதிகளின் சேட்டைகள் நுழையாமல் இருந்திருந்தால் அப்போதே இந்த திட்டம் ஏறத்தாழ 37 கோடி ரூபாயில் முடிந்திருக்கும்.

தோழமைக் கட்சிகளின் துணையோடு, அன்றைக்கு சேது சமுத்திர திட்டத்தைப் பற்றி பேசினோம், இன்றைக்கு சேது சமுத்திர திட்டத்தையே கொண்டு வருகின்ற அரசாக நாம் இன்றைக்கு ஆகியிருக்கிறோம். இந்த அரசு சேது சமுத்திர திட்டத்தை எப்படியும் கொண்டு வந்தே தீரும், தீர வேண்டும்.

இன்று இந்த விழாவுக்கு தோழமை கட்சி தலைவர்களை யார் யாரை அழைத்திருக்கிறோம் என்று எண்ணி பார்த்தால் -காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இங்கே இருக்கிறார். திராவிடர் கழகத்தினுடைய தலைவர் வீரமணி இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் நண்பர் டி.கே.ரெங்கராஜன் இங்கே இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சிவபுண்ணியம் இங்கே இருக்கிறார்.

இத்தனை கட்சிகளையெல்லாம் நாம் அழைத்திருப்பதற்குக் காரணம், இது தேர்தல் பயம் காட்டுவதற்காக அல்ல. தேர்தலிலே பார், பார் நாங்களெல்லாம் ஒன்று சேர்ந்து விட்டோம் என்று இப்போதே யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல.

நாங்கள் யாரையும் பயமுறுத்துபவர்கள் அல்ல, யார் பயமுறுத்தினாலும் பயப்படுபவர்களும் அல்ல.

எங்களுக்கு உணர்வுகள் உண்டு. நாங்கள் ஒன்றாக பழகியவர்கள். கருணாநிதி எந்தக் காலத்திலேயிருந்து கம்யூனிஸ்ட்டாக இருக்கிறான் என்பது நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இருவருக்கும் தெரியும். இங்கே வந்திருப்பவர்களுக்கும் தெரியும்.

அதை போல என்னோடு எவ்வளவு காலமாக இவர்கள் பழகுகிறார்கள், என்னைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது எனக்கும் தெரியும். ஆகவே என்னைப் பற்றி ரெங்கராஜன் தெரிந்து கொள்வதல்ல, சிவபுண்ணியம் தெரிந்து கொள்வதல்ல, நம்மைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள், மக்கள் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்காமல், நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்- அந்த மக்களுக்காக!.

இடையிலே ஏதேதோ வந்தது, போனது. மழை கூடி வருகிறது, இடி கூட இடிக்கிறது. அந்தமான் தீவிலே நிலம் அசைந்தால், இங்கே கூட நிலம் அசைகிறது. அதெல்லாம் இயற்கையின் விசேஷங்கள்.

நாம் இன்றைக்கு எந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இங்கே கூடியிருக்கிறோம்? எந்த கருத்துக்களால் நாம் ஒன்றுபட்டோம்? எந்தக் கருத்துக்கள் நம்மைப் பிணைத்தன? எந்த கருத்துக்கள் தமிழகத்தில், இந்தியாவில் வளரவிடாமல் செய்ய உறுதி பூண்டோம்? எந்த நிகழ்ச்சி நம்மை குலுங்க வைத்தது? பாபர் மசூதி நிகழ்ச்சியால் பா.ஜ.கவின் கொடூரத்தை நாம் புரிந்து கொண்டோமா? இல்லையா, அதற்குப் பிறகு நாம் எடுத்த நிலை என்ன? அந்த நிலையிலே நாம் நிலையாக நிற்கப் போகிறோமா இல்லையா என்பதை தான் நாம் முடிவு செய்தாக வேண்டும்.

உங்கள் யாரையும் நான் கசக்கி பிழிந்து முடிவு செய்கிறாயா, இல்லையா? என்று கேட்கத் தயாராக இல்லை. அப்படி கேட்க கூடிய உரிமை எனக்கு இருக்கிறது. அதை தாங்கக்கூடிய வலிமை ரெங்கராஜனுக்கும், சிவபுண்ணியத்திற்கும் இருக்கிறது. இருவருடைய உருவத்தையும் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எனவே அவர்கள் தாங்கக் கூடியவர்கள்.

அதே நேரத்திலே தமிழகம் தாங்குமா? நாடு தாங்குமா? நம்மை நம்பியிருக்கிற ஏழை எளிய மக்கள், பாட்டாளி மக்கள், நாம் தான் அவர்களைக் காப்பாற்றக் கூடியவர்கள், நாம் தான் அவர்களின் காவலர்கள் என்று கருதியிருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவர்களையெல்லாம் அரவணைத்து செல்ல வேண்டுமேயானால் நீங்கள் எங்கேயோ வேறொரு மாநிலத்திலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களை பார்த்து அதனால் ஏற்படுகின்ற கோபத்தை நம்மோடு இருக்கின்ற பீட்டர் மீது காட்டலாமா? காட்டக்கூடாது.

பீட்டர் நம்மோடு இருக்கிறார். ஆகவே பீட்டர் மீதுள்ள கோபம், வடக்கே ஏற்பட்ட கோபத்திற்கு நிகரானதல்ல. இந்த தோழமை அரும்பாடு பட்டு வளர்க்கப்பட்ட தோழமை. இந்த தோழமை தியாக தீபம். இந்த தோழமை தியாகத்திலே எழுந்த சுடர். அந்த சுடரை அணையாமல் காப்போம் என்று இந்த நிகழ்ச்சியிலே எல்லோரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Source: Oneindia

Monday, August 11, 2008

$6.00 Welcome Survey After Free Registration!

Saturday, August 9, 2008

தமிழனுக்காக எந்த அவமானத்தையும் தாங்கத் தயார் - கருணாநிதி
Karunanidhi
சென்னை: தமிழர்களுக்காக எந்த மாதிரியான அவமானத்தையும் தாங்க நான் தயார் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தமிழக அரசு சார்பில் 2006ம் ஆண்டிற்கான சின்னத்திரை தொடர்களில் சிறந்த நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் மற்றும் 2005, 2006-ம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளையும், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மானியத்தையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

சின்னத்திரை படங்களுக்கு இதுபோல் பரிசு வழங்குவதும், மானியம் வழங்குவதும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே மட்டும்தான் நடைபெறுகிறது.

சின்னத்திரைக்கான விருதுகளும், அந்த தரமான படங்களுக்கு தயாரிப்புக்குத் தேவையான துண்டு விழுகின்ற பற்றாக்குறையை சரி செய்கின்ற பரிவுத் தொகையாக இன்றைக்கு போதுமான தொகையாக அது இல்லாவிட்டாலும், மன ஆறுதல் வழங்கக் கூடிய தொகையாக அதை வழங்கியிருக்கிறோம்.

இங்கே ஒரு தம்பி படம் எடுத்து, அந்த படம் வெற்றிபெறாத காரணத்தால், வாழ்க்கையிலே நொடிந்துப் போயுள்ள அந்த தம்பி, இங்கே பரிவுத்தொகை பெற்ற போது என் கையைப் பிடித்துக் கொண்டு இந்தப் பணத்தை நான் என்னுடைய வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக வைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.

நான் அவரிடம் தொடர்ந்து இந்த துறையிலேயே தொழில் செய்யப் போகிறாயா? அல்லது தொழிலை மாற்றப் போகிறாயா என்று கேட்டேன். இல்லையில்லை, நிச்சயமாக மாற்றிக் கொள்ளப்போகிறேன் என்றார்.

எங்கள் தங்கம்

அதற்கு என்ன காரணம் என்பதை நான் வேதனையோடு எண்ணிப் பார்க்கிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சினிமா படம் எடுப்பவர்கள் அல்லது இந்தத் தொழிலிலே ஈடுபட்டிருப்பவர்கள் சில நேரங்களில் ஏற்படுகின்ற அலுப்பினால், அவர்கள் பட்ட கஷ்டங்களால், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளால், அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைகளால் இன்னும் சொல்லப்போனால் அந்த துறையிலே அவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களால் கூட போதும் இந்த தொழில் என்று அதை நிறுத்தி விடுவதுண்டு.

என்னுடைய மருமகன் முரசொலி மாறன் தொடர்ந்து ஏழெட்டு படங்கள் தயாரித்தார். அந்த படங்களின் வரிசையில் இறுதியாக வெளியிடப்பட்ட படம் எங்கள் தங்கம். அந்த படம் முடிவுற்று, விற்பனையாகி படம் வெளியிடப்பட்டு அதற்கு பிறகு சில பேர் அவரிடம் வந்து அடுத்த படம் என்னசார் என்று கேட்டார்கள்.

அடுத்த படமா, இதற்குமேல் படம் எடுப்பதில்லை என்று நான் முடிவு செய்திருக்கிறேன் என்று ரொம்ப விரக்தியோடு சொல்லி, அதோடு படம் எடுக்கின்ற தொழிலை அவர் நிறுத்திக் கொண்டார்.

அதை நான் ஆதரிப்பவனல்ல, அதை நான் வரவேற்பவனல்ல, கையை கடிக்கின்ற அளவிற்கு அல்லது குடும்பத்திலே புயலை ஏற்படுத்துகின்ற அளவிற்கு ஒரு படத்தினுடைய விளைவு இருக்குமேயானால், இழப்பு இருக்குமேயானால் அதை ஓரளவாவது சரி செய்கின்ற வகையிலே தொழிலில் வீழ்ந்து விட்டவர்களைக் காப்பாற்றுகின்ற அளவிற்கு, தூக்கிவிடுகின்ற அளவிற்கு அரசும் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட அரசாக, கலைத்துறையைப் பொறுத்தவரையில் இந்த அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை காட்டுகின்ற வகையிலே தான் சில படங்களுக்கு ஏறத்தாழ இரண்டரை கோடி ரூபாயை ஒரு படத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் என்ற அளவிலே கொடுத்து அவர்களுடைய மன ஆறுதலைக் கண்டிருக்கிறோம்.

எனக்கு வெறுப்பில்லை!

இது முழுமையாக அவர்களுக்கு போதுமானதென்று நான் சொல்லமாட்டேன். இருந்தாலும் இதை வைத்து அவர்கள் மன ஆறுதல் பெறுவார்களேயானால், பரவாயில்லை, நாம் முழுமையாக விழுந்துவிடவில்லை.

மறுபடியும் தலை தூக்கலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு இது ஏற்படுத்தும் என்பதற்காகத்தான் இதைச்சொல்கிறேனே அல்லாமல் வேறல்ல.

இப்படி அளித்த இந்த தொகையை கூட ஓரிருவர் முதலிலே அதற்காக விண்ணப்பித்து கேட்டு, எங்களுக்கு வழங்க வேண்டுமென்று எழுதிக் கொடுத்து, நாமும் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து அவர்களுக்கு அதற்கான தாக்கீதையும் அனுப்பிய பிறகு வாங்கவில்லை. அப்படி வாங்கப்படாத பணம் எல்லாம் அரசு நிதியிலே சேர்க்கப்படும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று சேர்க்கப்படுகின்ற அந்த தொகை இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு இப்படி குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்படுகின்ற ஒரு தரமான தமிழ் திரைப்படத்திற்கு வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் விண்ணப்பித்து விட்டு தரும்போது வேண்டாமென்று சொன்னவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது அவர்களுடைய உரிமை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. கேட்பதற்கும் உரிமை இருக்கிறது. கேட்பதைக் கொடுக்கும்போது வாங்க மறுப்பதற்கும் உரிமை இருக்கிறது.

எனவே உரிமைகளை போற்றுகின்ற ஆட்சி என்ற முறையில் அந்த உரிமைகளுடைய உணர்வை நான் மதிக்கின்றேன். யார் மீதும் இதன் காரணமாக எனக்கு வெறுப்பில்லை. நான் அல்லது இந்த அரசு அதன் காரணமாக அவமானப்பட்டு விட்டதாக கருதமாட்டேன். அவமானப்படுகிறோம் என்றால் யாரிடத்திலே அவமானப்படுகிறோம்?.

தமிழகத்திற்கு நஷ்டம்

ஒரு தமிழன் இன்னொரு தமிழனைப் பார்த்து தூற்றுகிறான். அல்லது கேலி செய்கிறான் அல்லது கிண்டல் செய்கிறான் அல்லது கேவலமாக பேசுகிறான் என்றால் அதை அவமானம் இல்லையா என்று கேட்டால், நான் ஒன்றை இந்த அவையிலே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் இன்று படுகின்ற அவமானத்தால் தமிழன் எதிர்காலத்திலே தலைதூக்கி நிற்பான், அதற்காக நான் இந்த அவமானத்தைப் பெறுகிறேன், ஏற்றுக்கொள்கிறேன் என்றால் இப்படி ஆயிரம் அவமானங்கள் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

உச்சநீதிமன்றம் வரையிலே சென்று நியாயம் கேட்கிறோம் என்றால் எதற்காக கேட்கிறோம்? எதற்காக வாதாடுகிறோம்?

பெரியாரும், அண்ணாவும், காமராஜரும் எந்த சேதுசமுத்திர திட்டத்திற்காக குரல் கொடுத்தார்களோ, அந்த திட்டம் நிறைவேற வேண்டும், அதை இடையிலே வந்தவர்கள் கெடுக்க நினைக்கிறார்கள். ஏதேதோ காரணங்களைக் கூறி அந்த திட்டமே நிறைவேறக் கூடாது என்று கருதுகிறார்கள். அது நிறைவேறாவிட்டால் அது இலங்கைக்கு லாபம். தமிழகத்திற்கு நஷ்டம்.

தமிழகத்தின் வளம், வாணிபம், வர்த்தகம், எதிர்காலம் இவைகள் எல்லாம் பாதிக்கப்படும். ஒருதிட்டம் நிறைவேற வேண்டும், அந்த திட்டம் சேதுக் கால்வாய் திட்டம், அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அண்ணா போராடினார். பெரியார் போராடினார். காமராஜர் நேருவிடம் சென்று வாதிட்டார்.

அத்தகைய ஒரு திட்டத்தை இன்றைக்கு மடக்கிப் போடச் செய்யப்படுகின்ற சூழ்ச்சியை எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடித்து நாம் தாங்கிக் கொண்டிருக்க முடியும் என்ற காரணத்தினாலே தான், அந்த போராட்டத்தில் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும் பரவாயில்லை.

அதனைத் தாங்கிக் கொண்டு தமிழகத்தை தாங்குவதற்கு நம்முடைய எதிர்காலத்தை வளமாக்குவதற்கு நம்முடைய தமிழ்இனத்தின் குழந்தை குட்டிகள், எதிர்காலச் சமுதாயம் நலிவடையாமல் இருப்பதற்கு நலிந்து போகாமல் காப்பாற்றப்படுவதற்கு நாம் நம்மை தியாகம் செய்வதென்றால் தியாகம் என்பது உயிரைக் கொடுப்பது மாத்திரமல்ல, தியாகம் என்பது, அவமானப்படுவது கூட தியாகம் தான்.

பெரியாருக்கு வந்த அவமானம்

பெரியார் கடலூரிலே அவருடைய சிலையை திறக்கின்ற ஒரு விழாவிற்கு என்னை வரச்சொல்லி, அழைத்துச் சென்றார். அவருடைய சிலையைத் திறக்கக் கூடாது என்று பெரியாருடைய சிலையை மறுத்து, பெரியார் மீது செருப்பு வீசினார்கள்.

ஐயோ என் மீது செருப்பு வீசி விட்டார்களே என்று பயந்து கொண்டு அவர் சென்னைக்கு திரும்பிவிட வில்லை. அவர் திரும்பிப் பார்த்து, இன்னொரு செருப்பையும் என்மீது வீசு என்று அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு பொறுமையோடு விழாவிலே கலந்து கொண்டு விட்டு சிலை திறப்பு விழா முடிந்த பிறகு திரும்பினார்.

ஒரு சிலை திறக்கக்கூடாதென்று செருப்பு வீசினார்கள். இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் பெரியாருக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த ஒரு செருப்பு வீசப்பட்டபோது அந்த அவமானம் எனக்கு ஏற்பட்டு விட்டது, இனி அந்த அவமானத்தோடு வாழமாட்டேன் என்று அவர் மன உறுதி கலைந்திருப்பாரயானால், அவரால் இவ்வளவு பெரிய இயக்கத்தைக் கட்டிக் காத்திருக்க முடியாது. நமக்கெல்லாம் தன் மான உணர்வைத் தட்டியெழுப்பியிருக்க முடியாது.

சகிப்புதன்மை, பொறுத்துக்கொள்வது, அது அவமானம் என்றாலும் அதைப் புகழாகவே எண்ணிக் கொள்வது, இவை ஒருவரை வாழ வைக்குமே தவிர அவரை வாடவிட்டு விடாது. அவருடைய எதிர்காலத்தை இருளாக்கிவிடாது. அந்த நம்பிக்கையோடுதான் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும், எவ்வளவு கண்டனங்கள் வந்தாலும் எவ்வளவு கேலிகள், கிண்டல்கள் வந்தாலும் அவைகளைப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும்.

சின்னத்திரைதான் ஆதாரம்!

இன்றைக்குக்கூட கேட்பார்கள். நாட்டில் எவ்வளவோ இருக்கிறது. அதையெல்லாம்விட்டு விட்டு இந்த சின்னத்திரைக்கு என்ன பரிசளிப்பு விழா என்று கேட்கக்கூடும். சின்னத்திரைக்கு பரிசு கொடுத்தால் தான் பெரியதிரை வாழும். பெரிய திரை அதை மறந்து விடக்கூடாது.

பெரிய திரை திடீரென்று வந்துவிட்டதா, இல்லை. பெரிய திரை வருவதற்கு முன்பு படங்கள் சின்னத்திரையிலே தான் ஓடின. இப்போது பார்க்கின்ற சின்னத் திரைகள் அல்ல. கடைவீதிகளில், சந்தை கூடுகின்ற இடங்களில் பார் பார் பயாஸ் கோப் பார் என்று சின்னத் திரைகளிலே படங்களை காட்டினார்களே. அதனுடைய வளர்ச்சிதான் இன்றைக்கு பெரிய திரை என்பதை எண்ணிப் பார்த்தால், சின்னத்திரை நம்முடைய ஆதி என்பதை நாம் உணர முடியும். ஆகவே சின்னத்திரை இல்லாமல் பெரிய திரை இல்லை.

நாம் 5 அடி உயரம், ஒன்றரை அடி அகலம் இருக்கிறோம் என்றால், குழந்தையாக இருந்த போது 5 அடி உயரம் இருந்தோமா என்றால் இல்லை. அப்போது சின்னத் திரையாகத்தான் இருந்தோம். இப்போதுதான் பெரிய திரையாக இருக்கிறோம். இதை மறந்துவிடக்கூடாது. ஆகவே சின்னத்திரை இல்லாமல் பெரிய திரை இல்லை. சின்னத்திரையை மறந்துவிடக்கூடாது.

நான் விடுதலைக்கு சொல்கிறேன். அன்றைக்கு சொன்னதை மறந்திருப்பேன் என்று கருதுகிறாய். நான் மறக்கமாட்டேன். உங்களுக்கு ஒரு இடம் வேண்டுமென்று கேட்டாய். நான் உங்களுக்கு அதிக இடம் கொடுத்துவிட மாட்டேன், கொடுக்கின்ற இடம், நீங்கள் அலுவலகம் நடத்துவதற்கு ஏற்றதாக அந்த இடத்தை நிச்சயமாகத் தருவேன். அந்த இடம் கலை வளர்க்கின்ற இடமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த இடத்தை தருவேன்.

இங்கே குஷ்பூ பேசும்போதும், ராதிகா பேசும் போதும் நீங்கள் எங்களுக்கு எப்போதுமே இப்படி பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது ராதிகாவின் ஆசையாக இருக்கலாம். அவருடைய வீட்டுக்காரரின் ஆசை எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது என்றார் முதல்வர்

சொத்துப் பங்கீடு!
-இமாம் கவுஸ் மொய்தீன்

தந்தையின் சொத்து
மக்கட் கென்பர்!

அவரின் மறைவுக்குப் பின்
நிகழ்ந்தது சொத்துப் பங்கீடு!

மூத்தவருக்குச் சென்றன
வீடும் கடையும்!

அடுத்தவரின் பங்கில்
நஞ்சை புஞ்சைகள்!

மற்றவருக்குச் சென்றன
நகைகளும் மனையும்!

சகோதரிகளின் பங்கில்
கால்நடைகள்!

கடைசி மகனாய்
நான்...

என் பங்கில் வந்தன
கடனும் அம்மாவும்!!

-இமாம் கவுஸ் மொய்தீன் (drimamgm2001@yahoo.co.in)

Source: Oneindia
ஒலிம்பிக்கில் இந்தியா இன்று ..
பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்

நீச்சல் - ஆடவர் 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் - விர்த்வால் காடே.

வில்வித்தை - மகளிர் குழு சீனா - இந்தியா.

பேட்மிண்டன் - ஆடவர் ஒற்றையர் - அனூப் ஸ்ரீதர் - மார்கோ வாஸ்கோன்சலஸ்.

துப்பாக்கிச் சுடுதல் - ஆடவர் டிராப் - மான்ஷெர் சிங், மனவ்ஜித் சிங் சந்து.
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் - ககன் நரங், அபினவ் பிந்த்ரா.

Source: Oneindia
சென்னை: திமுகவுடனான உறவை முறித்துக் கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான இறுதி முடிவு ஆகஸ்ட் 25ம் தேதி எடுக்கப்படுள்ளதாக இரு கட்சிகளின் மாநிலச் செயலாளர்களும் தெரிவித்துள்ளனர்.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வழங்கி வந்த ஆதரவை இடதுசாரிகள் முறித்துக் கொண்டவுடனேயே, தமிழகத்திலும் திமுக ஆட்சிக்கு வழங்கிவரும் ஆதரவை இடதுசாரிகள் முறிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் தற்போதுள்ள நிலையே தொடரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வரதராஜன் தெளிவுபடுத்தினார். சில நாட்களுக்கு முன்பு முதல்வரை சந்தித்த அவர் அதே கருத்தையே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இடதுசாரிகளின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற சிபிஎம்மின் கூட்டத்திற்குப் பிறகு இந்த நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தக் கட்சியுடனும் இடதுசாரிகள் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார். இதனால் திமுகவுடனான உறவை இடதுசாரிக் கட்சிகள் முறித்துக் கொள்ளும் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை வரதராஜனும், சிபிஐ செயலாளர் தா.பாண்டியனும் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளும் பூர்வாங்க ஆலோசனையை மேற்கொண்டன. இறுதி முடிவு ஆகஸ்ட் 25ம் தேதி எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.

25ம் தேதி இறுதி முடிவு - வரதராஜன்

வரதராஜன் கூறுகையில், காங்கிரஸுடனும், பாஜகவுடனும் அல்லது அவர்களுடன் தொடர்பு வைத்துள்ள வேறு எந்தக் கட்சியுடனும் எங்களுக்கு எந்த வேலையும் இல்லை.

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தா.பாண்டியனுடன் ஆலோசனை நடத்தினேன்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர், காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய கூட்டணியை உருவாக்க இடதுசாரிகள் முடிவு செய்துள்ளன. அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆகஸ்ட் 25ம் தேதி இரு கட்சிகளின் தலைவர்களும் கூடிப் பேசி இறுதி முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தா.பாண்டியன் கூறுகையில், கூட்டணி தொடர்பாக எந்தவித கெடுவும் இல்லை. அரசியல் கெடுவுக்கு வாய்ப்பே இல்லை. இருக்கவும் முடியாது என்றார்.

அதிமுக மதவாத கட்சியல்ல - தா.பாண்டியன்

அதிமுகவுடன் கூட்டணி வருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், திராவிடக் கட்சிகளை நாங்கள் மதவாத கட்சிகளாக பார்க்கவில்லை என்றார் பாண்டியன்.

லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணியிலிருந்து விலகி விட இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணியில் இருந்தால், சீட் பகிர்வின்போது தர்மசங்கடமாக இருக்கும். சரியாக இருக்காது என்பதே.

மேலும் காங்கிரஸை கடுமையாக சாடிக் கொண்டு அவர்களுடன் கூட்டணியில் நீடிப்பதில் லாஜிக் இல்ைல என்பதும் இடதுசாரிகளின் எண்ணம். இதன் காரணமாகவே திமுக கூட்டணியிலிருந்து விலக இடதுசாரிகள் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

சிக்கலில் திமுக

ஏற்கனவே பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றி விட்ட நிலையில், இடதுசாரிகளும் கூட்டணியிலிருந்து விலகினால் திமுக அரசுக்கு பெரும் சிக்கலாகி விடும்.

தற்போது சிபிஎம், சிபிஐ ஆகிய இரு கட்சிகளுக்கும் சட்டசசபையில் கூட்டாக 15 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விலகினால் காங்கிரஸை மட்டுமே திமுக முழுமையாக நம்பியிருக்கும் நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால், காங்கிரஸிடமிருந்து வரும் கோரிக்கைகளை திமுகவால் நிராகரிக்க முடியாத இக்கட்டான நிலையும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பாக். தீவிரவாதிகள் ஊடுறுவல் - உஷார் நிலை
Red Fort
டெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்காக 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல ஹூஜி தீவிரவாதிகள் அஸ்ஸாமைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினம் நெருங்கி வருவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் பயங்கர குண்டுவெடிப்பு சதியுடன் டெல்லிக்குள் ஊடுறுவியிருப்பாதக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதியன்று டெல்லியில் பயங்கர குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி நாசம் விளைவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.

சாந்தினி செளக், சரோஜினி நகர், கரோல்பாக், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களை அவர்கள் குறி வைத்திருப்பதாக ெதரிகிறது. இதில் சாந்தினி செளக் அருகேதான் செங்கோட்டை உள்ளது. இங்குள்ள கோட்டை கொத்தளத்திலிருந்துதான் பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திர தின உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடுறுவியுள்ள ஐந்துதீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் ேசர்ந்தவர்கள் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊடுறுவியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான நபர்கள், பொருட்கள் குறித்து போலீஸாருக்கு உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாமை ஹூஜி தாக்கலாம்

இதற்கிடையே, வங்கதேச தீவிரவாத அமைப்பான ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி (ஹூஜி) அமைப்பு அஸ்ஸாமில்தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த ஹூஜி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உல்ஃபா உள்ளிட்ட உள்ளூர் தீவிரவாத குழுக்களுடன் இணைந்து கார் குண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் மூலம் தாக்குதல் நடத்த ஹூஜி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அஸ்ஸாம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குவஹாத்தி, திஸ்பூர் உள்ளிட்ட நகரங்கள் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்ைக நடவடிக்கையாக இரவு நேர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர தின விழா அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மைதானங்கள் போலீஸ் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

Source: Oneindia
கத்தார் இந்தியர்கள் எண்ணிக்கை 4.2 லட்சமாக உயர்வு
Qatar
துபாய்: கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 4.2 லட்சமாக உயர்ந்துள்ளது. இது உள்ளூர் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இதுகுறித்து கத்தார் நாட்டு உள்நாட்டு விவகாரத்துறை இணை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் கலீபா அல்தானி கூறுகையில், ஜூலை 31ம் தேதியுடன் கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இது எங்களது நாட்டு உள்ளூர் மக்களை விட 2 மடங்கு அதிகமாகும். இது இன்னும் கூட அதிகரிக்கும். இத்தனை இந்தியர்கள் இருந்தாலும் எங்களுக்கு அவர்களால் எந்தவிதப் பிரச்சினையும் தருவதில்லை என்றார்.

கத்தாருக்கு வந்த இந்தியத் தூதர் டாக்டர் ஜார்ஜ் சோசப்பிடம் இத்தகவலை கத்தார் அமைச்சர் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் வங்கதேசத்தவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களுக்கு விசா வழங்க பல நாடுகள் தடை விதித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியர்களுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்தியர்கள் நல்லவர்கள் என்று கத்தார் அமைச்சர் பாராட்டியிருப்பது இந்தியர்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

கத்தாருக்கான இந்தியத் தூதர் ஜோசப் லெபனான் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதராக தீபா கோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ஸ்வீடனுக்கான தூதராக உள்ளார். விரைவில் கத்தாருக்கு வந்து புதிய பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்.
Source: Oneindia
கத்தார் இந்தியர்கள் எண்ணிக்கை 4.2 லட்சமாக உயர்வு
Qatar
துபாய்: கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 4.2 லட்சமாக உயர்ந்துள்ளது. இது உள்ளூர் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இதுகுறித்து கத்தார் நாட்டு உள்நாட்டு விவகாரத்துறை இணை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் கலீபா அல்தானி கூறுகையில், ஜூலை 31ம் தேதியுடன் கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இது எங்களது நாட்டு உள்ளூர் மக்களை விட 2 மடங்கு அதிகமாகும். இது இன்னும் கூட அதிகரிக்கும். இத்தனை இந்தியர்கள் இருந்தாலும் எங்களுக்கு அவர்களால் எந்தவிதப் பிரச்சினையும் தருவதில்லை என்றார்.

கத்தாருக்கு வந்த இந்தியத் தூதர் டாக்டர் ஜார்ஜ் சோசப்பிடம் இத்தகவலை கத்தார் அமைச்சர் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் வங்கதேசத்தவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களுக்கு விசா வழங்க பல நாடுகள் தடை விதித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியர்களுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்தியர்கள் நல்லவர்கள் என்று கத்தார் அமைச்சர் பாராட்டியிருப்பது இந்தியர்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

கத்தாருக்கான இந்தியத் தூதர் ஜோசப் லெபனான் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதராக தீபா கோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ஸ்வீடனுக்கான தூதராக உள்ளார். விரைவில் கத்தாருக்கு வந்து புதிய பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்.
Source: Oneindia
தமிழனுக்காக எந்த அவமானத்தையும் தாங்கத் தயார் - கருணாநிதி
Karunanidhi
சென்னை: தமிழர்களுக்காக எந்த மாதிரியான அவமானத்தையும் தாங்க நான் தயார் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தமிழக அரசு சார்பில் 2006ம் ஆண்டிற்கான சின்னத்திரை தொடர்களில் சிறந்த நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் மற்றும் 2005, 2006-ம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளையும், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மானியத்தையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

சின்னத்திரை படங்களுக்கு இதுபோல் பரிசு வழங்குவதும், மானியம் வழங்குவதும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே மட்டும்தான் நடைபெறுகிறது.

சின்னத்திரைக்கான விருதுகளும், அந்த தரமான படங்களுக்கு தயாரிப்புக்குத் தேவையான துண்டு விழுகின்ற பற்றாக்குறையை சரி செய்கின்ற பரிவுத் தொகையாக இன்றைக்கு போதுமான தொகையாக அது இல்லாவிட்டாலும், மன ஆறுதல் வழங்கக் கூடிய தொகையாக அதை வழங்கியிருக்கிறோம்.

இங்கே ஒரு தம்பி படம் எடுத்து, அந்த படம் வெற்றிபெறாத காரணத்தால், வாழ்க்கையிலே நொடிந்துப் போயுள்ள அந்த தம்பி, இங்கே பரிவுத்தொகை பெற்ற போது என் கையைப் பிடித்துக் கொண்டு இந்தப் பணத்தை நான் என்னுடைய வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக வைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.

நான் அவரிடம் தொடர்ந்து இந்த துறையிலேயே தொழில் செய்யப் போகிறாயா? அல்லது தொழிலை மாற்றப் போகிறாயா என்று கேட்டேன். இல்லையில்லை, நிச்சயமாக மாற்றிக் கொள்ளப்போகிறேன் என்றார்.

எங்கள் தங்கம்

அதற்கு என்ன காரணம் என்பதை நான் வேதனையோடு எண்ணிப் பார்க்கிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சினிமா படம் எடுப்பவர்கள் அல்லது இந்தத் தொழிலிலே ஈடுபட்டிருப்பவர்கள் சில நேரங்களில் ஏற்படுகின்ற அலுப்பினால், அவர்கள் பட்ட கஷ்டங்களால், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளால், அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைகளால் இன்னும் சொல்லப்போனால் அந்த துறையிலே அவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களால் கூட போதும் இந்த தொழில் என்று அதை நிறுத்தி விடுவதுண்டு.

என்னுடைய மருமகன் முரசொலி மாறன் தொடர்ந்து ஏழெட்டு படங்கள் தயாரித்தார். அந்த படங்களின் வரிசையில் இறுதியாக வெளியிடப்பட்ட படம் எங்கள் தங்கம். அந்த படம் முடிவுற்று, விற்பனையாகி படம் வெளியிடப்பட்டு அதற்கு பிறகு சில பேர் அவரிடம் வந்து அடுத்த படம் என்னசார் என்று கேட்டார்கள்.

அடுத்த படமா, இதற்குமேல் படம் எடுப்பதில்லை என்று நான் முடிவு செய்திருக்கிறேன் என்று ரொம்ப விரக்தியோடு சொல்லி, அதோடு படம் எடுக்கின்ற தொழிலை அவர் நிறுத்திக் கொண்டார்.

அதை நான் ஆதரிப்பவனல்ல, அதை நான் வரவேற்பவனல்ல, கையை கடிக்கின்ற அளவிற்கு அல்லது குடும்பத்திலே புயலை ஏற்படுத்துகின்ற அளவிற்கு ஒரு படத்தினுடைய விளைவு இருக்குமேயானால், இழப்பு இருக்குமேயானால் அதை ஓரளவாவது சரி செய்கின்ற வகையிலே தொழிலில் வீழ்ந்து விட்டவர்களைக் காப்பாற்றுகின்ற அளவிற்கு, தூக்கிவிடுகின்ற அளவிற்கு அரசும் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட அரசாக, கலைத்துறையைப் பொறுத்தவரையில் இந்த அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை காட்டுகின்ற வகையிலே தான் சில படங்களுக்கு ஏறத்தாழ இரண்டரை கோடி ரூபாயை ஒரு படத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் என்ற அளவிலே கொடுத்து அவர்களுடைய மன ஆறுதலைக் கண்டிருக்கிறோம்.

எனக்கு வெறுப்பில்லை!

இது முழுமையாக அவர்களுக்கு போதுமானதென்று நான் சொல்லமாட்டேன். இருந்தாலும் இதை வைத்து அவர்கள் மன ஆறுதல் பெறுவார்களேயானால், பரவாயில்லை, நாம் முழுமையாக விழுந்துவிடவில்லை.

மறுபடியும் தலை தூக்கலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு இது ஏற்படுத்தும் என்பதற்காகத்தான் இதைச்சொல்கிறேனே அல்லாமல் வேறல்ல.

இப்படி அளித்த இந்த தொகையை கூட ஓரிருவர் முதலிலே அதற்காக விண்ணப்பித்து கேட்டு, எங்களுக்கு வழங்க வேண்டுமென்று எழுதிக் கொடுத்து, நாமும் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து அவர்களுக்கு அதற்கான தாக்கீதையும் அனுப்பிய பிறகு வாங்கவில்லை. அப்படி வாங்கப்படாத பணம் எல்லாம் அரசு நிதியிலே சேர்க்கப்படும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று சேர்க்கப்படுகின்ற அந்த தொகை இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு இப்படி குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்படுகின்ற ஒரு தரமான தமிழ் திரைப்படத்திற்கு வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் விண்ணப்பித்து விட்டு தரும்போது வேண்டாமென்று சொன்னவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது அவர்களுடைய உரிமை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. கேட்பதற்கும் உரிமை இருக்கிறது. கேட்பதைக் கொடுக்கும்போது வாங்க மறுப்பதற்கும் உரிமை இருக்கிறது.

எனவே உரிமைகளை போற்றுகின்ற ஆட்சி என்ற முறையில் அந்த உரிமைகளுடைய உணர்வை நான் மதிக்கின்றேன். யார் மீதும் இதன் காரணமாக எனக்கு வெறுப்பில்லை. நான் அல்லது இந்த அரசு அதன் காரணமாக அவமானப்பட்டு விட்டதாக கருதமாட்டேன். அவமானப்படுகிறோம் என்றால் யாரிடத்திலே அவமானப்படுகிறோம்?.

தமிழகத்திற்கு நஷ்டம்

ஒரு தமிழன் இன்னொரு தமிழனைப் பார்த்து தூற்றுகிறான். அல்லது கேலி செய்கிறான் அல்லது கிண்டல் செய்கிறான் அல்லது கேவலமாக பேசுகிறான் என்றால் அதை அவமானம் இல்லையா என்று கேட்டால், நான் ஒன்றை இந்த அவையிலே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் இன்று படுகின்ற அவமானத்தால் தமிழன் எதிர்காலத்திலே தலைதூக்கி நிற்பான், அதற்காக நான் இந்த அவமானத்தைப் பெறுகிறேன், ஏற்றுக்கொள்கிறேன் என்றால் இப்படி ஆயிரம் அவமானங்கள் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

உச்சநீதிமன்றம் வரையிலே சென்று நியாயம் கேட்கிறோம் என்றால் எதற்காக கேட்கிறோம்? எதற்காக வாதாடுகிறோம்?

பெரியாரும், அண்ணாவும், காமராஜரும் எந்த சேதுசமுத்திர திட்டத்திற்காக குரல் கொடுத்தார்களோ, அந்த திட்டம் நிறைவேற வேண்டும், அதை இடையிலே வந்தவர்கள் கெடுக்க நினைக்கிறார்கள். ஏதேதோ காரணங்களைக் கூறி அந்த திட்டமே நிறைவேறக் கூடாது என்று கருதுகிறார்கள். அது நிறைவேறாவிட்டால் அது இலங்கைக்கு லாபம். தமிழகத்திற்கு நஷ்டம்.

தமிழகத்தின் வளம், வாணிபம், வர்த்தகம், எதிர்காலம் இவைகள் எல்லாம் பாதிக்கப்படும். ஒருதிட்டம் நிறைவேற வேண்டும், அந்த திட்டம் சேதுக் கால்வாய் திட்டம், அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அண்ணா போராடினார். பெரியார் போராடினார். காமராஜர் நேருவிடம் சென்று வாதிட்டார்.

அத்தகைய ஒரு திட்டத்தை இன்றைக்கு மடக்கிப் போடச் செய்யப்படுகின்ற சூழ்ச்சியை எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடித்து நாம் தாங்கிக் கொண்டிருக்க முடியும் என்ற காரணத்தினாலே தான், அந்த போராட்டத்தில் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும் பரவாயில்லை.

அதனைத் தாங்கிக் கொண்டு தமிழகத்தை தாங்குவதற்கு நம்முடைய எதிர்காலத்தை வளமாக்குவதற்கு நம்முடைய தமிழ்இனத்தின் குழந்தை குட்டிகள், எதிர்காலச் சமுதாயம் நலிவடையாமல் இருப்பதற்கு நலிந்து போகாமல் காப்பாற்றப்படுவதற்கு நாம் நம்மை தியாகம் செய்வதென்றால் தியாகம் என்பது உயிரைக் கொடுப்பது மாத்திரமல்ல, தியாகம் என்பது, அவமானப்படுவது கூட தியாகம் தான்.

பெரியாருக்கு வந்த அவமானம்

பெரியார் கடலூரிலே அவருடைய சிலையை திறக்கின்ற ஒரு விழாவிற்கு என்னை வரச்சொல்லி, அழைத்துச் சென்றார். அவருடைய சிலையைத் திறக்கக் கூடாது என்று பெரியாருடைய சிலையை மறுத்து, பெரியார் மீது செருப்பு வீசினார்கள்.

ஐயோ என் மீது செருப்பு வீசி விட்டார்களே என்று பயந்து கொண்டு அவர் சென்னைக்கு திரும்பிவிட வில்லை. அவர் திரும்பிப் பார்த்து, இன்னொரு செருப்பையும் என்மீது வீசு என்று அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு பொறுமையோடு விழாவிலே கலந்து கொண்டு விட்டு சிலை திறப்பு விழா முடிந்த பிறகு திரும்பினார்.

ஒரு சிலை திறக்கக்கூடாதென்று செருப்பு வீசினார்கள். இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் பெரியாருக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த ஒரு செருப்பு வீசப்பட்டபோது அந்த அவமானம் எனக்கு ஏற்பட்டு விட்டது, இனி அந்த அவமானத்தோடு வாழமாட்டேன் என்று அவர் மன உறுதி கலைந்திருப்பாரயானால், அவரால் இவ்வளவு பெரிய இயக்கத்தைக் கட்டிக் காத்திருக்க முடியாது. நமக்கெல்லாம் தன் மான உணர்வைத் தட்டியெழுப்பியிருக்க முடியாது.

சகிப்புதன்மை, பொறுத்துக்கொள்வது, அது அவமானம் என்றாலும் அதைப் புகழாகவே எண்ணிக் கொள்வது, இவை ஒருவரை வாழ வைக்குமே தவிர அவரை வாடவிட்டு விடாது. அவருடைய எதிர்காலத்தை இருளாக்கிவிடாது. அந்த நம்பிக்கையோடுதான் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும், எவ்வளவு கண்டனங்கள் வந்தாலும் எவ்வளவு கேலிகள், கிண்டல்கள் வந்தாலும் அவைகளைப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும்.

சின்னத்திரைதான் ஆதாரம்!

இன்றைக்குக்கூட கேட்பார்கள். நாட்டில் எவ்வளவோ இருக்கிறது. அதையெல்லாம்விட்டு விட்டு இந்த சின்னத்திரைக்கு என்ன பரிசளிப்பு விழா என்று கேட்கக்கூடும். சின்னத்திரைக்கு பரிசு கொடுத்தால் தான் பெரியதிரை வாழும். பெரிய திரை அதை மறந்து விடக்கூடாது.

பெரிய திரை திடீரென்று வந்துவிட்டதா, இல்லை. பெரிய திரை வருவதற்கு முன்பு படங்கள் சின்னத்திரையிலே தான் ஓடின. இப்போது பார்க்கின்ற சின்னத் திரைகள் அல்ல. கடைவீதிகளில், சந்தை கூடுகின்ற இடங்களில் பார் பார் பயாஸ் கோப் பார் என்று சின்னத் திரைகளிலே படங்களை காட்டினார்களே. அதனுடைய வளர்ச்சிதான் இன்றைக்கு பெரிய திரை என்பதை எண்ணிப் பார்த்தால், சின்னத்திரை நம்முடைய ஆதி என்பதை நாம் உணர முடியும். ஆகவே சின்னத்திரை இல்லாமல் பெரிய திரை இல்லை.

நாம் 5 அடி உயரம், ஒன்றரை அடி அகலம் இருக்கிறோம் என்றால், குழந்தையாக இருந்த போது 5 அடி உயரம் இருந்தோமா என்றால் இல்லை. அப்போது சின்னத் திரையாகத்தான் இருந்தோம். இப்போதுதான் பெரிய திரையாக இருக்கிறோம். இதை மறந்துவிடக்கூடாது. ஆகவே சின்னத்திரை இல்லாமல் பெரிய திரை இல்லை. சின்னத்திரையை மறந்துவிடக்கூடாது.

நான் விடுதலைக்கு சொல்கிறேன். அன்றைக்கு சொன்னதை மறந்திருப்பேன் என்று கருதுகிறாய். நான் மறக்கமாட்டேன். உங்களுக்கு ஒரு இடம் வேண்டுமென்று கேட்டாய். நான் உங்களுக்கு அதிக இடம் கொடுத்துவிட மாட்டேன், கொடுக்கின்ற இடம், நீங்கள் அலுவலகம் நடத்துவதற்கு ஏற்றதாக அந்த இடத்தை நிச்சயமாகத் தருவேன். அந்த இடம் கலை வளர்க்கின்ற இடமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த இடத்தை தருவேன்.

இங்கே குஷ்பூ பேசும்போதும், ராதிகா பேசும் போதும் நீங்கள் எங்களுக்கு எப்போதுமே இப்படி பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது ராதிகாவின் ஆசையாக இருக்கலாம். அவருடைய வீட்டுக்காரரின் ஆசை எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது என்றார் முதல்வர்

Source: Oneindia

Thursday, August 7, 2008

சீனர்களின் நம்பிக்கை எட்டு-நாளை '08:08:08 ஒலிம்பிக்' துவக்கம்!
Chinas birds nest olympic stadium
பெய்ஜிங்: நம் ஊரில் 8 என்றாலே பலருக்கு எட்டிக்காயாய் கசக்கும். எட்டு என்ற எண்ணில் முடியும் எதையும் பெரும்பாலும் மறுத்துவிடுவார்கள், அதுவும் சாதாரண எண்தானே என்ற யோசனையே இல்லாமல்.

வாகனப் பதிவின் போது, எட்டாம் நம்பர் வராமலிருக்க லஞ்சம் கொடுக்கக் கூட தயாராக இருப்பார்கள்.

எட்டாம் தேதி எந்தக் காரியத்திலும் ஈடுபடாதவர்களும், எட்டு எழுத்து வருவது போல சினிமா தலைப்பு வைக்க விரும்பாதவர்களும் நிரம்பியது நம் ஊர்.

ஆனால் சீனர்கள் அப்படியல்ல... அவர்களுக்கு எட்டுதான் எல்லாமே.

எட்டு என்ற எண்ணை அவர்கள் கடவுளாகவே வணங்குகிறார்கள். அதனால்தான் ஒலிம்பிக் போட்டிகளை 08.08.08 என்ற தேதியில் தொடங்க முடிவு செய்தார்கள். அது மட்டுமல்ல அந்தப் போட்டிகள் துவங்கும் நேரத்தைப் பாருங்கள்...

அதுவும் சீன நேரப்படி இரவு 08 மணி 08 நிமிடம் 08 வினாடிகளில் தான் தொடங்கவுள்ளது. (இந்தியாவைவிட சீனா நேரம், 2 மணி 30 நிமிடங்கள் அட்வான்ஸ்)

அதுமட்டுமல்ல, தங்கள் நாட்டு ஒலிம்பிக் வீரர்களின் கூட்டுத் தொகையும் எட்டு என அமையும்படி தேர்வு செய்துள்ளார்களாம்.

இது ஏதோ இன்று நேற்று முடிவு செய்த விஷயமல்ல... எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2008-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை சீனாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு செய்த போதே, இந்த தேதியையும் நேரத்தையும் சீன ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்து, அரசின் ஒப்புதலைப் பெற்றுவிட்டது.

சீனாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம்தான் ஆட்சியில் உள்ளதென்றாலும், மார்க்கெட் எகானமிக்கு மாறியதோடு மக்களின் பெரும்பாலான நம்பிக்கைகளில் குறுக்கே நிற்பதில்லை அரசு!

ஒலிம்பிக் மெடல்களையும் எட்டு வரும்படிதான் ஜெயிப்பார்களோ...!
Source: Oneindia
அக்டோபரில் சந்திரனுக்கு ஆள் இல்லாத விண்கலம்: இஸ்ரோ
சென்னை: சந்திரனுக்கு ஆள் இல்லாத விண்கலம் வரும் அக்டோபர் 2வது வாரத்தில் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.

சென்னையில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் பல அறிவியல் தொழில்நுட்ப சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியா, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான பணி தொடங்கப்படும். விண்வெளியின் அதிக வெப்பம், அதிக குளிர் இரண்டையும் தாங்கக் கூடிய ஏற்பாடுகளை அதில் செய்வோம். இந்த பணியை செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் முதல் திட்டத்தில் செயற்கை கோள் வடிவமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இது முடிவடைந்த 45 முதல் 50 நாட்களில் விண்ணில் அது ஏவப்படும். அக்டோபர் மாதம் 2வது வாரத்திற்குள் விண்கலம் செலுத்த வாய்ப்புள்ளது. ஆனால் தேதி முடிவு செய்யப்படவில்லை.

வரும் 2011-12ல் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் 2வது திட்டத்தை இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சந்திரனை சுற்றி வரவும், சந்திரனில் உள்ள பொருட்களின் மாதிரிகளை சேகரிக்கவும் செய்யும்.

அடுத்த மார்ச் மாதத்திற்குள் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் அனுப்பப்படும். ஜிஎஸ்எல்வியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரியோஜினிக் என்ஜின் பயன்படுத்தப்படும்.

கான்பூர் ஐஐடி, வேலூரில் உள்ள விஐடி, சத்யபாமா பல்கலைக்கழககம் ஆகியவை சிறிய மற்றும் மிகச் சிறிய செயற்கை கோள்களை உருவாக்க அனுமதி கேட்டுள்ளன என்றார் அவர்.

Source: Oneindia
கச்சத்தீவை மீட்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெ. வழக்கு
டெல்லி: கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வழக்கு தொடர்ந்தார்.

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவேன் என சமீபத்தில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமைகளை திரும்பப் பெறவும், இந்திய படகுகள், கச்சத்தீவில் நுழையவும், அங்கு மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் உரிமைகளை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

கச்சத்தீவு தொடர்பாக 1974ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி இந்திய, இலங்கை அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அது செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடித்து வந்தனர். அந்தத் தீவை தங்களது வாழியல் இடமாக இரு நாட்டு மீனவர்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அந்த தீவை தங்களது நாட்டுக்குச் சொந்தமானது என்று
இலங்கை கூறி வருகிறது.

ஆனால் பூகோளப்படியும், வரலாற்று ரீதியிலும் கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது.

எனவே கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.

Source: Oneindia
கடத்தல் புகார்-கைத்தறி அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா நீக்கம்
Raja
சென்னை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியை மிரட்டி, கடத்தி, அவர்களது சொத்தைப் பறிக்க முயன்ற வழக்கில் சிக்கிய தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா இன்று டிஸ்மிஸ் செய்யபப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி - மலர்விழி தம்பதியினருக்குச் சொந்தமான சொத்துக்களைப் பறிக்கும் முயற்சியாக அவர்களையும், அவர்களது மகன் சிவபலானையும் அமைச்சர்ராஜாவின் ஆட்கள் கடத்தி வைத்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதில் பழனிச்சாமியும், மலர்விழியும் நேரில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். தங்களது மகன் சிவபாலன், இன்னும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க அமைச்சர் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் தன் மீதான புகார்கள் பொய்யானவை, அரசியல் உள்நோக்கம் கொண்டவை என செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜா விளக்கியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று திடீரென கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிவபாலன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தான் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை, நண்பர்களுடன் பெருந்துறை, ஈரோடு, திருப்பூர், கோவை என சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததாக கூறினார். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

அதேசமயம், நேற்று மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகிய பழனிச்சாமியும், மலர்விழியும் அமைச்சர் ராஜா மீது புகார் கொடுத்தனர்.

இந்தச் சூழ்நிலையில் இன்று அமைச்சர் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். முதல்வர் கருணாநிதி இதுதொடர்பாக ஆளுநருக்கு அளித்த பரிந்துரையை ஏற்ற ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, கைத்தறித்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து என்.கே.கே.பி. ராஜா நீக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் வழக்கில் மாட்டிய அமைச்சர் ராஜா அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2வது சர்ச்சை அமைச்சர் ராஜா:

கடந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் சர்ச்சையில் சிக்கி பதவி இழந்துள்ள 2வது அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், லஞ்ச வழக்கில் சிக்கிய தனது உறவினருக்கு சாதகமாக நடக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாவிடம் ரெக்கமன்டேஷன் செய்த விவகாரத்தில் சிக்கிய சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பதவியிலிருந்து விலகினார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில்தான் தற்போது ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட மிகப் பெரிய புகார்களுக்கு ஆளாகி பதவியை இழந்துள்ளார் ராஜா.

அத்தனைக்கும், பழனிச்சாமி - மலர்விழி தம்பதிக்கு சொந்தமான பூர்வீகமான 10 ஏக்கர் நிலம்தான் முக்கிய காரணம்.

இந்த நிலத்தை பறிக்கும் முகமாக பழனிச்சாமி தம்பதியையும், அவர்களது மகனையும் கடத்திச் சென்று சித்திரவதை செய்து, கொலை மிரட்டல்விடுத்தும், வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கியும் மிரட்டினார் ராஜா என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும்.

என்.கே.கே.பி. ராஜாவின் தந்தை என்.கே.கே. பெரியசாமி. இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். ராஜா, ஈரோடு மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார். தற்போதைய அமைச்சரவையில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

ராஜா வகித்து வந்த இத்துறைகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்திகள்:

ராஜாவுக்கு பயந்து சிவபாலன் பேட்டி!

ராஜா மீது மனித உரிமை கமிஷனில் புகார்
Source: Oneindia

Sunday, August 3, 2008

எங்களுக்கு மட்டுமே ஆளும் தகுதி உள்ளது - ராமதாஸ்
Ramadoss
விழுப்புரம்: மக்கள் திமுகவையும், கருணாநிதியையும் இனி ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டை ஆள எங்களுக்கு தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கு தகுதி உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.

பாமகவின் 20ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழ் செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், வன்னியர்கள் எல்லா வகையிலும் திமுகவுக்கு உறுதுணையாக இருந்தவர்கள். தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு திமுகவின் கோட்டையாக இருந்ததற்கு காரணம் அங்கிருந்த வன்னியர் தலைவர்களே. நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மூவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுத்து இருக்கிறோம். ஆனால் திமுக வரலாற்றில் வன்னியருக்கு குறைந்தபட்சம் துணைப் பொதுச்செயலாளர் பதவியை
கொடுக்கக்கூடாதா?

1996ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது பு.த.இளங்கோவன், அருள்மொழி உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதேபோல இப்போது குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்.

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்களில் வன்னியர் ஒருவரும் கிடையாது. முதன்மைச் செயலாளர்கள் நால்வரில் யாரும் வன்னியர் கிடையாது. இவ்வளவு பெரிய சமுதாயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர். அவரும் 6 மாதங்களில் ஓய்வு பெற இருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் தனிநபர் வருமானம் மிகவும் குறைவு. கல்வி, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளில் பின்தங்கிய மாவட்டமும் விழுப்புரம் மாவட்டம் தான்.

உள் ஒன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு இருந்தது. ஆனால் இப்போது இல்லை. நான் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன் அல்ல. இளைஞர்களின் வளர்ச்சிக்கு, தொழில் வளர்ச்சிக்கு, வேளாண் வளர்ச்சிக்கு என்று தனி ஆவணம் தயாரித்துள்ளோம்.

வன்னிய மக்களுடைய, ஏழை விவசாயிகளுடைய வாழ் வாதாரங்களை பிடுங்கிக்கொண்டு அவர்களை நிலமற்றவர்களாக, அனாதைகளாக ஆக்கும் எந்த திட்டத்தையும் இந்த ராமதாஸ் உயிரோடு இருக்கும்வரை நிறைவேற்ற முடியாது என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

விவசாய விளை நிலங்களில் கைவைத்தால் ராமதாஸ் சும்மா இருக்க மாட்டான். அதனுடைய விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

2020ல் எப்படி தமிழகம் என்று உதகை பிரகடனம் அறிவித்த போது 2011ல் பாமக ஆட்சி என்று 8 முறை முதல்வர் கருணாநிதி கிண்டல் செய்து எந்த குறையை சொன்னாலும், உங்கள் (பாமக) ஆட்சியில் நிறை வேற்றிக்கொள்ளுங்கள் என்றார்.

உங்கள் (கருணாநிதி) வாக்கு பலிக்கும். தலைகீழாக உள்ள தமிழக சமூக பொருளாதார நிலையை மாற்றி யமைப்போம். இனி முதல்வராக மாட்டேன் என்று கூறியிருக்கிறீர்கள். உண்மைதான். மக்கள் உங்கள் கட்சியையும், உங்களையும் இனி ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டை ஆள எங்களுக்கு தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கு தகுதி உள்ளது? என்றார் ராமதாஸ்
Source: Oneindia
கோவில் விழாவில் கூட்ட நெரிசல்: 100 பேர் பலி?
பிலாஸ்பூர் (இ.பி): இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இமாசல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது நைனாதேவி கோவில். இந்த கோவிலில் சிரவண உற்சவம் நடக்கிறது. இன்று நடந்த உற்சவத்தில் கலந்து கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

இந்த நிலையில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 100 பக்தர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 7 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

லாரி ஆற்றில் கவிழ்ந்து 60 பேர் பலி:

இதற்கிடையே, பாட்னா அருகே லாரி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 60 கூலி தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ளது மான்சி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் 125 பேர் அருகில் உள்ள அகுனி கிராமத்தில் வேலைக்கு சென்றனர். அங்கு வேலை முடித்துவிட்டு கூலியும், தானிய மூட்டைகளுடன் நேற்று மாலை லாரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

குண்டும் குழியுமாக இருந்த சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கோர்கி ஆற்றில் தலைக்குப்புற வீழ்ந்தது. இதில் மூட்டை இடுக்குகளில் சிக்கி 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

Source: Oneindia
கருணாநிதி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நாளை விசாரணை
டெல்லி: கடந்த அக்டோபர் 1ம் தேதி சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நடத்த வலியுறுத்தி திமுக அரசு பந்த் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி திமுக அரசு பந்த் நடத்த அழைப்பு விடுத்தது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து பந்த் அழைப்பு உண்ணாவிரதமாக மாற்றப்பட்டது. இருப்பினும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்களும் சரிவர ஓடவில்லை.

இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி, கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதிஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த மனு நாளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.
Source: Oneindia
சூரத் நகரில் மீண்டும் வெடிகுண்டு சிக்கியது
23rd Live bomb found in Surat
சூரத்: அடுத்தடுத்து வெடிகுண்டுகள் சிக்கி வந்த நிலையில், சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் சூரத் நகரில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த வாரம் முழுவதும் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 23 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அனைத்துமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடிக்கவில்லை.

இந்தநிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்று ஒரு வெடிகுண்டு சிக்கியுள்ளது. அட்வாலைன்ஸ் என்ற இடத்தில் இந்த வெடிகுண்டு சிக்கியது. சௌபாத்தி பஸ் நிலையம் அருகில் உள்ள விளம்பர பலகையின் பின்னால் பச்சை நிற பையில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.

தகவல் அறிந்ததும் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் விரைந்து வந்து குண்டை மீட்டு அதை செயலிழக்கச் செய்தனர்.

இதையடுத்து இப்பகுதியில் மேலும் வெடிகுண்டுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மோப்ப நாய்கள் சகிதம் குண்டுகளைத் தேடும் பணி நடந்து வருகிறது.

சூரத் நகர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் படியான பொருட்கள் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு போலீஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Source: Oneindia
SAN FRANCISCO: Intel Corp has disclosed the most details yet of a next-generation microchip architecture that will first take direct aim at the graphics semiconductor market and could pack some 100 electronic brains into a single microprocessor. Code-named Larrabee, the microarchitecture - the basic blueprint of a computer chip - will result in processors as soon as 2009.

The design is Intel's first foray into the stand-alone graphics chip market. Intel currently provides so-called integrated graphics chipsets to PC makers, which are not as powerful as discrete graphics microchips. Larrabee would broaden the competition in the quickly growing and profitable discrete graphics market, now dominated by Advanced Micro Devices Inc's ATI division and Nvidia Corp.

The Larrabee graphics chips are expected to compete against Nvidia's GeForce and ATI's Radeon products. Beyond seeking an initial beachhead in the computer graphics market, Intel has great hopes for Larrabee, with the world's largest chipmaker saying that it hopes an entire ecosystem of software programs will grow up around Larrabee that can take advantage of the many-core chips that would be installed in future computers and computing devices.

"As Intel takes away the veils to what Larrabee products will look like, it's clear that there's a solid foundation to the architecture that could easily result in very impressive products," said Peter Kastner, an analyst with Scott-Page, a Westport, Massachusetts-based market research firm. Until now, Intel has been sketchy on details of the Larrabee design. Chips based on Larrabee can be expected to be utilized in the oil and gas exploration, medical imaging and financial services industries, Intel said.

While in the near to medium term, Larrabee might heat up the competition in the graphics chip market, over the longer haul, Intel hopes that Larrabee can kick-start a move in software development to programs that are parallel in nature. Parallel programming, or parallel computing, has been touted for years as the next big thing in technology, allowing computers to run faster by dividing up computing tasks over multiple microprocessors instead of using a single processor to perform one task at a time. An initial step toward parallel computing has been the shift in recent years toward processors from Intel and AMD that have multiple cores, or "brains," but industry watchers have long said that is just the tip of the iceberg.

From the graphics market, Intel hopes to expand chips based on Larrabee into the general purpose computing arena, where most people think of microprocessors today: they power email, Web browsing, music-playing and spreadsheet programs. "The key innovation is developing a parallel, many-core product for the graphics market and then enabling the general processing-type stuff," said Doug Carmean, Larrabee's chief architect. "We've talked to nearly everyone in software."

Intel picked the graphics market initially for Larrabee because it is just about the only mainstream part of the software market - video gaming - where parallel programming is already widely used. "These are among the most complex parallel applications I've seen," said Anwar Ghuloum, a principal engineer with Intel Microprocessor Labs, of video games. Specifically, the Larrabee design has enhancements such as a wide vector processing unit, multi-threading, 64-bit extensions and sophisticated pre-fetching, which enable a big boost in available computation power while retaining the familiarity of Intel's x86 architecture.

Chips based on Intel's x86 architecture power nearly all the world's personal computers and the vast majority of server computers used in corporate computer networks. Larrabee also allows the development of software building blocks, known as APIs, new graphics algorithms and general purpose computation on the graphics processor but with established PC development tools, Intel said. "Intel is showing its cards, but will have to deliver the products that live up to an attractive architecture," said analyst Kastner. Santa Clara, California-based Intel plans to detail Larrabee in a paper to be presented later this month at the SIGGRAPH 2008 computer graphics conference in Los Angeles.

Saturday, August 2, 2008

இந்தியாவுக்கு முக்கியமான நாள் - மன்மோகன் மகிழ்ச்சி
கொழும்பு: இந்தியாவுக்கு இது மிக முக்கியமான நாள் என்று ஐஏஇஏ ஒப்புதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு வரைவு ஒப்பந்தத்திற்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி நேற்று ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள பிரதர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கையில், இது இந்தியாவுக்கு மிக முக்கியமான நாள்.

இந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. சர்வதேச சமுதாயத்துடன் இந்தியாவின் அணு வர்த்தகம் மீண்டும் தொடங்கவிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும், உலகுக்கும் நலம் பயப்பதாக அமையும் என்றார் அவர்.

விலகியது அணுத் தீண்டாமை - கபில் சிபல்:

மத்திய அறிவியல்,தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் கருத்து ெதரிவிக்கையில், இதுவரை இருந்து வந்த அணுத் தீண்டாமையிலிருந்து இந்தியா விலக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மிகவும் சந்தோஷமான தினம்.

இத்தகைய வரலாற்று மாற்றத்தை, திருப்பத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிகழ்த்தியுள்ளது என்றார் அவர்.

Source: Oneindia
கூகுள் துவங்கும் புதிய முதலீட்டு நிறுவனம்!
நியூயார்க்: கூகுள் நிறுவனம் விரைவில் ஆரம்ப முதலீட்டு நிறுவனம் (venture capital) ஒன்றைத் துவங்கவிருக்கிறது.

கூகுளின் துணைத் தலைவர் டேவிட் டிரம்மண்ட் தலையில் செயல்பட உள்ள இந்த நிறுவனத்துக்கு முழுவடிவம் தரவும், நடைமுறை விதிகளை உருவாக்கவும் முன்னால் தொழிலதிபரான வில்லியம் மாரிஸை அமர்த்தியுள்ளது கூகுள்.

இந்நிறுவனம் எப்படிச் செயல்படப் போகிறது, எந்த மாதிரி நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்யப் போகிறது என்பதெல்லாம் இன்னும் விவரமாகத் தெரியவில்லை.

இப்படி ஒரு முதலீட்டு நிறுவனத்தைத் துவங்குவதன் மூலம், புதிய நிறுவனங்களுக்குத் தேவைப்படும் ஆரம்ப முதலீடுகளைத் தருவதில், இன்டெல், மோட்டரோலா, காம்காஸ்ட்டுக்கு இணையாக, உலகின் மிகப் பெரிய சாப்ட்வேர் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் அவதாரமெடுக்கிறது.

மேலும் ஒரு மிகப்பெரிய பாரம்பரிய முதலீட்டு நிறுவனமாகவும் மாறப்போகிறது.

இன்டர்நெட் துறையில் ஏற்கெனவே வால்ட் டிஸ்னி, அமேஸான் நிறுவனங்கள் கணிசமான புதிய நிறுவனங்களுக்கு ஆரம்ப முதலீடுகளை வழங்கி ஊக்கமளித்து வருகின்றன. இந்தப் பிரிவில் மேலும் புதிய முனைவோர்களைக் கொண்டு வருவதற்காக இந்நிறுவனங்கள் பல விதிமுறைத் தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில் கூகுளின் வருகை மேலும் இத்துறையில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வித்திடும் என நம்பப்படுகிறது.

Source: Oneindia
பாதுகாப்பு வரைவு ஒப்பந்தத்திற்கு ஐஏஇஏ ஒப்புதல்
IAEA
வியன்னா: இந்தியாவின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு ஒருமித்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்தியாவின் வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தருவதற்கான சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று வியன்னாவில் தொடங்கியது.

35 நாடுகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தைத் தொடங்கி வைத்து அணு சக்தி ஏஜென்சியின் தலைவர் எல் பராதே பேசுகையில், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவின் வரைவு ஒப்பந்தம் உள்ளது.

இந்தியாவின் தேவைகளை மட்டுமல்லாது அணு சக்தி ஏஜென்சியின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் உள்ளது.

அணு உலைகளின் பாதுகாப்பு தொடர்பான சிறந்த கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதை இது உறுதி செய்கிறது.

இந்த ஒப்பந்தப்படி இந்தியாவின் 14 அணு உலைகள், ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும். 2014ம் ஆண்டுக்குள் இவை ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்டும். இவற்றில் 6 அணு உலைகள் ஏற்கனவே அணு சக்தி ஏஜென்சியின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.

மற்ற அணு உலைகளில் ஏஜென்சியின் கண்காணிப்பு 2009ம் ஆண்டு முதல் தொடங்கும். இதுதொடர்பான நடவடிக்கைளை படிப்படியாக இந்தியா, ஏஜென்சிக்குத் தெரிவிக்கும். ஏஜென்சி தனது உறுப்பினர்களுக்கு இவற்றைத் தெரிவிக்கும்.

அடிஷனல் புரோட்டோகால் குறித்த விவாதங்களை ஏற்கனவே இந்தியாவும், சர்வதேச அணு சக்தி ஏஜென்சியும் தொடங்கி விட்டன என்றார் எல்பராதே.

இதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஒரே குரலில் ெதரிவித்ததைத் தொடர்ந்து வரைவு ஒப்பந்தத்தை அணு சக்தி ஏஜென்சி ஏற்றுக் கொண்டது.

அடுத்தது என்எஸ்ஜி, அமெரிக்க நாடாளுமன்றம்:

இதன் மூலம் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான முக்கிய பணியை இந்தியா வெற்றிகரமாக முடித்துள்ளது. அடுத்து என்.எஸ்.ஜி.யின் ஒப்புதலை இந்தியா பெற வேண்டும். இதையும் வெற்றிகரமாக முடித்து விட்டால் அடுத்து அமெரிக்க காங்கிரஸில் (நாடாளுமன்றத்தில்) ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டு அணு சக்தி ஒப்பந்தம் முறைப்படி அமலுக்கு வரும்.

Source: Oneindia
இனியும் முதல்வராகும் ஆசையில்லை, தகுதியானவர்களுக்கு ஆதரவு-கருணாநிதி
Karunanidhi
வேலூர்: இனியும் முதல்வராகும் ஆசை இல்லை. மக்களுக்கு தொண்டாற்ற நினைக்கும், ஆளும் தகுதியள்ளவருக்கு தூண்டுகோலாக இருப்பேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

வேலூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்கும் விழா, வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ஸ்டாலின் தலைமை வகித்தார். விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

வேலூருக்கு மாநகராட்சி தகுதி வேண்டும் என்று பலகாலமாக தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டு வெற்றி விழாவாகியுள்ளது.

வடஆற்காடு மற்றும் வேலூர் ஆகிய ஊர்கள் மிகுவும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இந்தியாவின் விடுதலைக்காக முதல் குரல் எழுந்த இடம் வடக்கே உள்ள பகுதி அல்ல, தென்னகத்தில்தான். குறிப்பாக, வேலூர் நகரத்திலேதான். இங்கிருந்த சிப்பாய்கள்தான் அந்த கிளர்ச்சியை நடத்தினார்கள்.

அந்த கிளர்ச்சிக்கு வேலூர் சிப்பாய் கிளர்ச்சி என்றே பெயர் உண்டு.
உண்மையில், விடுதலைப் போராட்டத்துக்கு வேலூரில் நடந்த கலகம்தான் வித்தூன்றியது.

வேலூர் நகரத்தில் சிப்பாய் புரட்சியினுடைய 200வது ஆண்டு நினைவு தினத்தை 10.7.2006ல் கடைபிடித்து, சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டேன். வேலூர் கோட்டையில் அதற்கென ஒரு நினைவுத் தூணும் அமைக்கப்பட்டது. இதை என்னுடைய ஆட்சியில் நடந்தது என்பதை நினைத்தபோது இதயத்தில் இனம்காணாத பூரிப்பு ஏற்பட்டது.

இந்தியா சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்கள், அவர்கள் வடக்கே பிறந்தால்தான் சிறப்பாக கருதப்படுகிறார்கள். தெற்கே பிறந்திருந்தால் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களுக்கு அந்த சிறப்பு கிடையாது.

வேலூருக்கு விமான நிலையம் வேண்டும் என்று எம்எல்ஏ ஞானசேகரன் கேட்டார். விமான நிலையம் நிச்சயமாக வேண்டும். அதற்கு இடம் தேவை. அந்த இடத்தை பெறும் நேரத்தில் இடையூறு வரும். இடையூறு செய்வதற்காகவே சிலர் அரசியல் நடத்துகிறார்கள்.

அவர்களையெல்லாம் சமாளிக்க வேண்டும். இது மேய்ச்சல் நிலம், பயிர் நிலம் வேண்டும் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். வேலூருக்கு விமான நிலையம் நிச்சயம் வரும். விரைவில் வரும். ஆனால் எப்போது என்று என்னால் சொல்ல முடியாது.

வேலூர் மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ.10 கோடி மானியம் வேண்டும் என்று நகராட்சி தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் தீர்மானம் போட்டார்கள். முதல்கட்டமாக ரூ.5 கோடி அனுமதித்துள்ளோம்.

ஈரோட்டை மாநகராட்சியாக்கினோம். அப்போது ஒரு குறிப்பை ஸ்டாலின் தந்தார். அதில், 1917ல் ஈரோடு நகராட்சி தலைவராக இருந்த தந்தை பெரியார், இந்த ஈரோடு நகரம் அளவில் எல்லையில் குறைவாக இருப்பதால் பக்கத்தில் உள்ள ஊர்களை ஈரோடு நகராட்சியோடு சேர்க்க வேண்டும்.

அப்படி சேர்த்தால் எதிர்காலத்தில் மாநகராக ஆகும் என்று எழுதியிருக்கிறார். அதன் அடிப்படையில் வீரப்பன்சத்திரத்தை ஈரோட்டுடன் இணைத்து ஈரோடு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல வேலூர் மாநாகராட்சியுடன் பல ஊர்கள் இணைக்கப்படும்.

முதல்வர் ஆசை இல்லை:

5-வது முறையாக முதல்வராக இருக்கிறேன். இனி முதல்வராக வேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது. அந்த ஆசைக்கு கருணாநிதி அடிமையாக மாட்டான். இன்னும் ஒரு முறை முதல்வர் ஆக வேண்டும் என்று கேட்கின்றனர். நான் அப்படி ஆசைப்பட மாட்டேன்.

யார் தமிழகத்தை ஆளக்கூடிய தகுதியை பெறுகிறார்களோ, யாருக்கு மக்கள் அந்த ஆதரவை தருகிறார்களோ அவர்களை ஊக்குவிக்கின்ற, அவர்களை மேலும் ஆர்வத்தோடு பணியாற்ற வைக்கும் தூண்டுகோலாக இருப்பேன். இனி எனக்கு செங்கோல் தேவை இல்லை. தூண்டுகோல் போதும். அதை வைத்து நான் இந்த நாட்டில் இன்னும் பல அற்புதங்கள், அதிசயங்களை, சாதனைகளை ஆக்க முடியும்.

காலை முதல் மாலை வரை உழைத்து அலுத்த மக்களை காப்பாற்ற வேண்டும். இன்னும் சுதந்திரத்தினுடைய உண்மையான தன்மையை ஏழை மக்கள் அனுபவிக்கவில்லை. அதன் சுவையை முழுமையாக இந்திய மக்கள் பெறவில்லை.

அதற்கு யார் யார் உழைக்கிறார்களோ, யார் தியாகம் செய்ய முன்வருகிறார்களோ, அவர்களுக்கு தோழனாக, பணியாளனாக, விசுவாசமான வேலைக்காரனாக இருந்து, உற்ற தோழனாக இருந்து, உழைப்பேன், உழைப்பேன், உயிருள்ளவரை உழைப்பேன்.

அப்படி உழைக்கும் பாதையில் ஒரு வெற்றிப்படிக்கட்டாகத்தான் வேலூரில் இந்த மன்றத்தை காண்கிறேன். இது வேலூர் மக்கள் சாதனை என்று ஒத்துக்கொள்கிறேன், இது என்னுடைய சாதனையோ, ஸ்டாலினின் சாதனையோ அல்ல. அமைச்சரவை, மாற்றுக் கட்சிக்காரர்களின் சாதனை.

எல்லோரும் சேர்ந்து இழுத்தால்தான் தேரை இழுக்க முடியும். ஊர் கூடி தேர் இழுப்போம். உலகத்தார் எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம். இன்று நாசகார செயலை பார்க்கிறோம். எதிர்க்க முடியாமல் திகைக்கிறோம். தீய சக்திகளை விலக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபடுவோம். அதை இந்த விழாவில் ஒரு சூளுரையாக எடுப்போம் என்றார் கருணாநிதி.

Source: Oneindia