Sunday, June 8, 2008

தசாவதாரம்..வியந்து போன கருணாநிதி!
Kamal, Karunanidhi and KS Ravikumar
இதுவரை பத்திரிகைச் செய்திகளாகவே இருந்து வந்த உலக நாயகன் கமல்ஹாசனின் தசாவதாரத்தின், திரை அவதாரத்தைப் பார்த்து முதல்வர் கருணாநிதி பார்த்து, ரசித்து, வியந்து கமல்ஹாசனையும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி மற்றும் குடும்பத்தினர், அமைச்சர்கள், கவிஞர் வைரமுத்து குடும்பத்தினர் ஆகியோருக்காக சென்னை போர்பிரேம்ஸ் திரையரங்கில் நேற்று மாலை சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

படம் பார்க்க வந்த முதல்வரை படத்தின் நாயகன் கமல் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

படத்தை முழுவதும் பார்த்து முடித்த பிறகு கமலை அழைத்து வெகுவாகப் பாராட்டியுள்ளார் கலைஞர். "ரொம்ப உழைச்சிருக்கய்யா... இந்த கடுமையான உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தசாவதாரத்தை ஆங்கிலத்தில் டப் செய்யாமலேயே ஹாலிவுட்டுக்குத் தாராளமாக கொண்டு செல்லலாம். அவர்களுக்கு நிகராக உன்னாலும் (கமல்) படத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டாய் என்று பாராட்டித் தள்ளியுள்ளார் முதல்வர்.

படத்தின் ஒவ்வொரு காட்சியின்போதும் கமலிடம், "இது நீதானாய்யா... நம்பவே முடியலையே..." என்று வியந்து போனாராம்.

கலைஞருடன் படம் பார்த்த முக்கியப் பிரமுகர் ஒருவர், படம் குறித்து நம்மிடம் கூறுகையில், இந்த மாதிரி ஒரு படம் இதுவரை தமிழ் சினிமா சரித்திரத்தில் வந்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கமல் அற்புதம் செய்திருக்கிறார் என்றார் வியப்பு விலகாமல்.

கமல் போட்டிருக்கும் 10 வேடங்களில் ஒன்று 110 வயது கிழவர் கெட்டப். இது கமல்தானா என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு மேக்கப் அதிசயம் நிகழ்த்தியிருக்கிறாராம் இந்த வேடத்தில்.

அதேபோல தெலுங்குப் பேசும் பாத்திரம் ஒன்றிலும் அசல் ஆந்திராக்காரராகவே மாறியிருக்கிறாராம்.

படத்தின் ஹைலைட் என்று சொல்லும் அளவுக்கு வந்திருப்பது நெல்லைத் தமிழ் பேசியபடி கலக்கும் கமல் அண்ணாச்சிதானாம்.

பரமக்குடியில் பிறந்து சென்னையில் வளரந்த கமல் என்ற நல்ல நடிகருக்குள்ளே இத்தனை தத்ரூபமாக ஒரு நெல்லை அண்ணாச்சி ஒளிந்திருப்பதைக் கண்டு வியந்து போன முதல்வரும் அவருடன் படம் பார்த்த இதர விஐபிக்களுமே கைத் தட்டி ரசித்திருக்கிறார்கள்.

இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 45 நிமிடங்களுக்கு மேல் கிராபிக்ஸ் இடம் பெற்றுள்ள படமும் தசாவதாரம்தானாம். அதிலும் சுனாமியில் கமல் மாட்டிக்கொள்வது போன்ற காட்சிகளில் கிராஃபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு அத்தனை பெர்பக்ஷன் காட்டியிருக்கிறார்களாம்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வருகிற செவ்வாய்க்கிழமை தசாவதாரம் படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

தசாவதாரம் வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது (அப்படிதானே, ரவிச்சந்திரன் சார்..?)

Source: Oneindia
ஜூன் 09,2008,00:00 IST

சென்னை : ""தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளத்தில் 2.5 சதவீதத்தை நடிகர் சங்க வளர்ச்சி நிதிக்கு கொடுக்க வேண்டும்,'' என்று தென் னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 55ம் ஆண்டு பேரவைக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசியதாவது: நடிகர் சங்கம் உருவாக காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., தென் னிந்திய நடிகர் சங்க கலையரங்கை கட்டி நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிவாஜி கணேசன், தமிழக மக்களிடம் தனித்துவம் பெற்ற எம்.ஆர்.ராதா ஆகியோருக்கு நடிகர் சங்க வளாகத்தில் உருவச் சிலை வைக்கப்படும்.


நடிப்பு கலை வளர்க்க நடிகர் சங்க அறக்கட்டளை, வேல்ஸ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, நடிகர் சங்கத்தில் நடிப்பு பயிற்சிக் கல்லூரி வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்படுகிறது. இதில் மூன்று வருடங்கள் திரைப்படம் தொடர்பான படிப்பு மற்றும் ஒரு வருட பட்டய படிப்பு ஆகியவற்றை அறிமுகம் செய்யவும், இவ் வாண்டு 100 மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் திட்டமிடப் பட்டுள்ளது. சங்க உறுப்பினர்களின் நல் வாழ்வுக்காக தமிழ்த் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 2.5 சதவீதத்தை சங் கத்திற்கு நன்கொடையாக அளிக்க வேண்டும். இந்நடவடிக்கை குறித்து முன்னணி நடிகர், நடிகைகளுடன் விரைவில் கலந்து பேசி சமூகமான முடிவு காணப்படும். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படங்களில் புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தும் போது அவர்களை நடிகர் சங்க உறுப்பினராக்கிய பிறகே நடிக்க பயன்படுத்த வேண்டும். இதுவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் வரும் 30ம் தேதிக்குள்ளாக உறுப்பினராக சேர வேண்டும். இல்லையேல், நடிகர் சங்க உறுப்பினர்கள் அவர்கள் இருக்கும் இடம் சென்று அவர்களை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்வர்.


மறைந்த சிவாஜிகணேசனுக்கு பெரிய அளவில் மணிமண்டபம் கட்ட விரும்புகிறோம். இம்மணிமண்டபம் குறித்து சிவாஜியின் மகன் பிரபுவுடன் நடிகர் சங்கம் சார்பில் பேசப்பட்டுள்ளது. மணி மண்டபடம் அமைக்க தமிழக அரசு மூலம் சென்னை அடையாறில் சிறிய இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தைவிட மாற்று இடம் அரசு ஒதுக்கி தந்தால் உதவியாக இருக்கும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழ் சினிமாவின் 75ம் ஆண்டையொட்டி சென் னையில் பிரமாண்டமாக நட்சத்திர கலை விழா நடத்த திட்டமிடப் பட் டுள்ளது. இதற்கு தமிழக முதல் வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் அழைக்க உள் ளோம். நடிகர் சங்கத்தில் மூன்று கோடியே 49 லட்சம் ரூபாய் இருப்பு உள்ளது.இவ்வாறு சரத்குமார் கூறினார். கூட்டத்தில் நடிகர் சங்கப் பொதுச் செயலர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, நடிகர்கள் நெப்போலியன், எஸ்.வி. சேகர், கே.ராஜன், அலெக்ஸ், குண் டுக்கல்யாணம், நடிகைகள் ராதிகா, மும்தாஜ், விந்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, June 5, 2008

முதியோருக்கு பாதுகாப்பில்லா சென்னை!
டெல்லி: இந்தியாவின் பெருநகரங்களில் முதியவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சென்னையில்தான் முதியவர்களுக்கு அதிகளவுக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருப்பதாகவும அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஹெல்ப்ஏஜ் இந்தியா' நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்தியாவின் நான்கு பெருநகரங்கள் மற்றும் நான்கு அடுத்த நிலை நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நகரங்களில் முதியவர்களின் நிலை எப்படி உள்ளது என்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

இந்த ஆய்வில், நாட்டின் பெருநகரங்களை விட அடுத்த நிலை நகரங்களில்தான் முதியவர்களுக்கு சமூக பாதுகாப்பு அதிகம் உள்ளது தெரிய வந்தது.

சிறு நகரங்களில் முதியவர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் வாழ்கின்றனர். அவர்களின் உடல் நலமும் சிறப்பாக உள்ளதுடன் இந்த நகரங்களில்தான். சமுதாயம் இவர்களிடம் மிகுந்த பாதுகாப்பாகவும், அக்கறையுடனும் உள்ளது.

பெருநகரங்களை விட சிறு நகரங்களில்தான் முதியவர்கள் மிகுந்த நிம்மதியுடன் உள்ளனர்.

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களிலும், லக்னோ, விஜயவாடா, புவனேஸ்வர், அகமதாபாத் ஆகிய சிறு நகரங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

62 சதவீத முதியவர்கள், பொருளாதார ரீதியாக தங்களது பிள்ளைகளை நம்பியுள்ளனர். இதுதான் அவர்களது பாதுகாப்பின்மை நிலைமைக்கு முக்கிய காரணம்.

வேலைவாய்ப்பு, சம்பாதிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக பிள்ளைகள், தங்களது பெற்றோர்களை விட்டுப் பிரிந்து வாழ விரும்புகின்றனர். இதனால் தனிமையிலும், மனக் கவலையிலும் வாழும் நிலைக்கு முதியவர்கள் தள்ளப்படுகின்றனர்.

32 சதவீத முதியவர்கள்தான் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளைப் பெறுகின்றனர்.

பொருளாதார ரீதியாகவும், உடல் நல ரீதியாகவும் பாதிக்கும் மேற்பட்ட முதியவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். போதிய சேமிப்பு இல்லாதது, குழந்ைதகளை நம்பியிருப்பது, பெருகி வரும் பண வீக்கம் ஆகியவையே இதற்குக் காரணம்.

தனிமையில் இருப்பது, பணச் சிக்கல், உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறும் முதியவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாகும்.

மருத்துவ தேவைகள், மருந்துகள் வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு பிறரின் உதவியை நாடும் நிலையில் 42 சதவீதம் பேர் உள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அடுத்தவர்களின் உதவியை அதிகம் நாடுவது வயதான பெண்மணிகள்தான்.

மூன்றில் 2 மடங்கு முதியவர்கள், ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரத்திற்கு இடம் பெயர்ந்தவவர்கள். அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு முதியவர்கள், பிறப்பிலிருந்தே நகரத்தில் வசிப்பவர்கள்.

பிள்ளைகளின் புறக்கணிப்பு, கவனிப்பின்மை ஆகியவை காரணமாக அதிகம் கவலைப்படுவது வயதான பெண்கள்தான்.

சாதாரண நகரங்களில் வசிக்கும் முதியவர்களில் 40 சதவீதம் பேர் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். அதேசமயம், இந்த எண்ணிக்கை பெருநகரங்களில் 28 சதவீதம் மட்டுமே உள்ளது.

அதேசமயம், உடம்புக்கு முடியாத முதியவர்களிடம் பரிவு காட்டுவதில், சிறு நகரங்கள் முன்னணியில் உள்ளன. அதாவது 82 சதவீதம் பேர், அதாவது பிள்ளைகள், தங்களது பெற்றோர் மற்றும் முதியவர்கள் மீது பரிவு காட்டுகின்றனர்.

முதியவர்களைப் புறக்கணிக்கும் சென்னை:

பெருநகரங்களைப் பொறுத்தவரை, முதியவர்களிடம் பரிவு காட்டுவதில், டெல்லி முதலிடத்தில் உள்ளது. 86 சதவீத பிள்ளைகள் தங்களது வீட்டில் உள்ள முதியவர்களிடம் அக்கறை காட்டுகின்றனர்.

இருப்பதிலேயே மோசமான நகரம் சென்னைதான். இங்கு 52.7 சதவீதம் பேரே முதியவர்களிடம் பரிவு காட்டுகின்றனர்.

முதியவர்கள், தங்களது பொழுதுபோக்காக வைத்திருப்பது, டிவி பார்ப்பது, கோவில்களுக்குப் போவது, கடைகளுக்குப் போவது மற்றும் வாக்கிங் ஆகியவைதான்.

முதியவர்கள் மனதில் நிலவும் பாதுகாப்பின்மை உணர்வைப் போக்க அவர்களிடம் மனம் விட்டுப் பேசுதல், அவர்களிடம் ஆதரவாக, அனுசரணையாக இருப்பது ஆகியவை முக்கியம். அப்படி இருந்தால், முதியவர்கள் தற்கொலை செய்வது உள்ளிட்ட கொடுமைகள் நீங்க வழி உண்டு என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Oneindia
பங்கு சந்தையில் லேடன்-தாவூத் பணம்-ஜெ.
Jayalalitha
சென்னை: இந்திய பங்குச் சந்தைகளில் பின் லேடன், தாவூத் இப்ராகிம் போன்றவர்களி்ன் பணம் முதலீடு ஆகவில்லை என்பதை உறுதி செய்ய மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அந்த நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இந்திய பங்கு சந்தையில் 'பார்ட்டிசிபேட்ரி நோட்கள்' மூலம் தீவிரவாதிகள் தங்களது விவரங்களை மறைத்துவிட்டு ஏராளமாக முதலீடு செய்து வருவதாகவும் இதனால் 'பொருளாதார தீவிரவாதம்' உருவாகி வருவதாகவும் ஜெயலலிதா கூறியிருந்தார்.

இதை மறுத்த மத்திய நிதியமைச்சகம் 'பார்ட்டிசிபேட்ரி நோட்கள்' குறித்து முழுமையாக புரிந்து கொள்ளமாலேயே ஜெயலலிதா குற்றம் சாட்டுவதாகவும், பங்குச் சந்தை முதலீடுகளை 'செபி' அமைப்பு கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தது.

பங்குச் சந்தையில் (sensex) திடீரென ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவது 'பார்ட்டிசிபேட்ரி நோட்கள்' (பங்கெடுக்கும் குறிப்புகள் என்னும் பத்திரங்கள்) மூலம் தான் என்று ஜெயலலிதா கூறும் குற்றச்சாட்டு, பங்கு சந்தையில் இந்தப் பத்திரங்கள் மற்றும் அவற்றின் பரிமாற்றங்கள் ஆகியவை பற்றி அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது என்றும் கூறியிருந்தது.

இந் நிலையில் பதிலுக்கு ஜெயலலிதா மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் பற்றி நான் புகார் கூறியிருந்தேன். நான் கூறியவற்றுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கமாக பதில் அளிக்காமல் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக புகார்களை கூறியிருக்கிறது. நான் கூறிய புகார்கள் ஆதாரமற்றவை என்றும் எனக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறது.

மொரீஷியஸ் போய் வரும் 'பிளாக் மணி':

வெளிநாட்டவர்கள் யார் யார் என்ற முழு விவரம் இன்னும் தெரியாத நிலையிலேயே நமது நாடு உள்ளது. அவர்களது பெயர்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன. கணக்கில் காட்டாத பணம் வெளிநாடு சென்று மீண்டும் மொரீஷியஸ் நாடு வழியாக இங்கே வருகிறது.

`பி-நோட்' (participatory notes) முறைப்படி இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெயர்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிடத் தயாரா?. இந்த முதலீடுகள் ஒழுங்குபடுத்தும் `செபி' அமைப்பின் இணையத் தளத்தில் வெளியிட தயாரா? இதை செய்யத் தயங்குவது ஏன்?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தை வாங்க அனுமதிக்கப்படும்போது அதன் மூலம் பயன் அடைகிறவர், அதன் உரிமையாளர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களை நிதி இலாகா அறிந்து கொள்கிறதா?.

"பின் லேடன், தாவூத் இப்ராகிம்"...:

பின் லேடன், தாவூத் இப்ராகிம் போன்றவர்களி்ன் பணம் அந்த நிறுவனங்களுக்கு வரவில்லை என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அந்த நடவடிக்கைகள் என்ன?

இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில் தீவிரவாதிகள் ஈடுபடவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? பங்கு சந்தையில் தீவிரவாதிகள் பங்கு பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (எம்.கே.நாராயணன்) கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என்று நிதி இலாகா கூறுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 23ம் தேதியும், 24ம் தேதியும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.18,600 கோடிக்கு பங்குகளை விற்றார்கள். இது இந்திய பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

'24 மணி நேரம் டைம்'!!!:

பங்குகளை விற்ற அந்த முதலீட்டாளர்கள் யார் என்பதை நிதி இலாகா வெளியிட வேண்டும். இந்திய பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவால் இந்திய முதலீட்டாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு தற்கொலை வரைக்கும் சென்றனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மறுப்பு தெரிவிக்கும் நிதி அமைச்சர் சிதம்பரம் எனது இந்த கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்கட்டும்.

இல்லாவிட்டால் ராஜினாமா செய்க!:

இல்லாவிட்டால் அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யட்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Source: Oneindia
Font Help

தமிழகத்தில் டீசல் மீதான வி்ற்பனை வரி 2% குறைப்பு
Karunanidhi
சென்னை: டீசல் மீதான விற்பனை வரியை தமிழக அரசு 2 சதவீதம் குறைத்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளது. டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து வாகனங்களின் கட்டணங்கள் உயர்ந்து, மற்ற விலைவாசிகளும் உயரும் என்பதால் அதன் மீதான விற்பனை வரியை மட்டும் தமிழக அரசு இன்று குறைத்துள்ளது.

இது குறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கின் கோரிக்கையை ஏற்றும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியபோதும் அதன் மீதான விற்பனை வரியை 25 சதவீதத்திலிருந்து 23.43 சதவீதமாக மாநில அரசு குறைத்தது.

பின்னர் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தபோதும் கூட வரியை தமிழக அரசு உயர்த்தவில்லை. இதனால் ஆண்டுதோறும் ரூ. 200 கோடி இழப்பு ஏற்பட்டு வந்தது. இப்போது வரி விகிதம் மேலும் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டு்க்கு ரூ. 260 கோடி இழப்பு ஏற்படும்.

அப்போது அப்படி பேசிய ஜெயலலிதா:

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களை உயர்த்தியது. அப்போது மாநில அரசு விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, வரியைக் குறைக்கச் சொல்லி தமிழக அரசின் வருமானத்தை கெடுக்கப் பார்க்கிறார் பாலசுப்பிரமணியம். இதன் மூலம் மாநில அரசை பொருளாதார சிக்கலில் மாட்டி விடப் பார்க்கிறார் என்று பதில் சொன்னார்.

மேலும் இந்த யோசனையைப் போய் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுடன் சொல்லச் சொன்னார்.

இப்போது இப்படி பேசும் ஜெயலலிதா:

இதே ஜெயலலிதா தான் இப்போது மாநில அரசு விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவரது ஆலோசனையை அலட்சியப்படுத்தாமல், வரியை முடிந்தவரைக்கும் அரசு குறைத்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, June 3, 2008

Visit: http://www.healthy-india.org/

Sunday, June 1, 2008