Friday, October 23, 2009

Tamil Internet 2009 - Conference Schedule

Tamil Internet 2009 - Conference Schedule
Conference Venue: "Hörsaalgebäude" of the University of Koeln

Universitätsstrasse 35, Albertus-Magnus-Platz 1, 50931 Köln, Germany

Friday, 23 October 2009
Time

Program
15.00 - 16.00

Inagural Ceremony
16.00 - 16.30

Coffee Break


16.30 - 18.00

Chair:

Vasu Renganathan

Plenary Session

i)Mr. Muthu Nedumaran: Tamil on mobile devices : Challenges and Opportunities

ii) Dr. Thomas Malten: Online Tamil Dictionaries

iii)Prof. A.G. Ramakrishnan: மநுமொழி ஆய்வகம் : R & D work on Multifont OCR, SAPI Compatible TTS and Online Handwritten Word Recognition for Tamil.

Saturday, 24 October 2009
Time Program

09.00 - 10.30

Chair:

A. Murugaiyan


Session A1: Computer Assisted Learning and Teaching of Tamil

i) Ms. Devaki Annusami and D. Mathialagan: E-learning to enahnce language Proficiency

ii)Ms. Kalaiselvi: இணைய வகுப்பறை:தொழில் நுட்பமும் கற்போர் உளவியலும்

iii)Ms. Kanmani Shanmugam: Learning Tamil the Fun way

09.00 - 10.30

Chair:

N. Ganesan

Session B1: Tamil Localisation, Tamil Keyboard and Open Source Software

i) Mr. G. Balachandran: Tamil Encoding, Keyboard Layout and Collation Sequence Standard

for ICT Sri Lanka

ii) Mr. K. Sarveswaran: Tamil Localisation Process- A case study

iii) Mr. Sinnathurai Srivas: Inside Tamil Unicode

10.30 - 11.00

Coffee Break


Time

Program
11.00 - 12.30

Chair:

Subashini, T.

Session B2: Tamil localization, Tamil keyboard, open-source software & mobile applications

i) Dr. Elanttamil: தமிழ் திறவூற்று மென்பொருள்கள்

ii) Mr. Sivarajah Anuraj: தமிழ் மென்பொருள்களும் மக்கள் பாவனையும்

iii) Gnana Bharathi, D (CLRI, Chennai, India)

அறிவியல் மற்றும் தற்காலத் தேவைகளுக்கேற்ற தமிழெழுத்துச் சீர்திருத்தமும் அவற்றைக் கணினி மற்றும் கைபேசி செயல்பாட்டிற்குப் பயன்படுத்தும் முறையும்

11.00 - 12.30

Chair:

Siva Pillai


Session A2: Computer Assisted Teaching and Learning of Tamil

i) Mr. R. Natarajan: Preparing Pedagogy for e-learning courses: a pilot plan for Tamilnadu

ii) Dr. G. Singaravelu: Effectiveness of Multimedia Package in Learning Vocabulary in Tamil

iii) Dr. S.K. Panneerselvam : இணையம் வழி மொழிக் கற்றல் - கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்



12.30 - 13.30

Lunch Break


Time

Program
13.30 - 15.00

Chair:

Achutan Menon

Session B3: Tamil Portal: Blogger, Aggregator, Wikipedia etc.

i) Dr. N. Ganesan: Unicode Blog Aggregators and Linguistic Research

ii) Dr. E. Iniya Nehru: Automatic E-content Generation

iii) Mr. M. Mauran: Tamil Wikipedia



13.30 - 15.00

Chair:

Seetha Lakshmi

Session A3: Computer Assisted Teaching and Learning of Tamil

i) Dr.A.R. Sivakumaran: பேச்சுத் தமிழைக் கற்பித்தலில் கணினியின் பயன்பாடு

ii) Ms. Sivagouri Kaliamoorthy: Enhancing learning of Tamil Language in a one-to-one computing environment

iii) Ms. S. Swarnalatha : E_mt2 M-learning makes Tamil Learning Squared



15.00 - 15.30

Coffee Break


15.30 - 17.00

Chair:

Muthu Nedumaran

Session B4: Tamil Portal: Blogger, Aggregator, Wikipedia etc.

i) Mr. Diraviyam S. Maniam : IDNs (International Domain Names) and its progress in ICANN

ii) Prof. A. Muthukumar : Development of Social Networking website and Tamil e-learning

software using Unicode

iii) Mr. I. Thiruvalluvan: கணினியில் நேர் பெயர்ப்புச் சொற்கள்



15.30 - 17.00

Chair:

P. R. Nakheeran

Session A4: Computer Assisted Teaching and Learning of Tamil

i) Dr.R. Velmurugan: Development of e-content for learning Tamil phonetics

ii) Prof. Paul Dhanasekaran: The Use of Technology among Tamil Medium Students – Barriers and Solutions

iii) Dr.R. Subramani : The Use of Multi Media in Teaching Tamil through Internet (இணைய வழித் தமிழ்க் கற்பித்தலில் பல்ஊடகங்களின் பயன்பாடு)



17.00 - 18.00

INFITT Annual GB Meeting


Sunday, 25 October 2009

Time

Program

09.00 - 10.30

Chair:

S. Rajendran



Session A5: Tamil Diaspora, Teaching Tamil as a Second Language and impact of Technology

i) Siva Pillai (Goldsmith College, University of London , UK)

Tamil Language Teaching in UK

ii) Paramasivam, Muthusamy (University of Malaysia, Malaysia)

Enhancing Students Creativity Through Multimedia in Malaysian Tamil Schools

iii) Seetha Lakshmi (National Institute of Education NIE, Singapore)

Use and Impact of Information Technology in Teacher Training in Singapore

09.00 - 10.30

Chair:

Balachandran, G.

Session B5: Online Databases

i) Thenmozhi Durairaj (SSN College, Chennai, India)

Tamil-English Cross Lingual Information Retrieval System for Agriculture

ii) Andavar, V.M.S (Pachaiyappa's College, Chennai, India)

Sangam Literature Teaching and Learning through Multimedia

iii) Chevillard, Jean-Luc (CNRS Paris, France)

Critical editions of Tamil works: exploratory survey and future perspectives

10.30 - 11.00

Coffee Break


Time

Program
11.00 - 12.30

Chair:

Arun Mahizhnan

Session A6: Tamil Diaspora, Teaching Tamil as a second-language and impact of Technology & Database of Tamil Inscriptions

i) Nakkeeran, P.R. (Tamil Virtual University, Chennai, India)

Tamil Virtual University - activities and challenges (India)

Enhancing the Process of Learning Tamil with Synchronized Media

ii) Murugaiyan, Appasamy (Ecole Pratique des Hautes Etudes, Paris, France)

Tamil Inscriptions and online search: Database Compilation, Grammatical analysis and Translation.

iii) Vasu Renganathan (University of Pennsylvania, Philadelphia, USA)

Enhancing the Process of Learning Tamil with Synchronized Media

11.00 - 12.30

Chair:

A.G. Ramakrishnan

Session B6: Natural Language Processing: OCR, Information Retrieval, Artificial Intelligence and Machine Translation

i) Mala Nehru (T Mala) (Anna Univ, Chennai, India)

An Intelligent System for Pictures based on Tamil Sentences Generation

ii) M.B.A.Salai Aaviyamma, SRM University, Ramapuram, and Dr.K.Kathiravan, Easwari Enginnering Collge, Ramapuram

Problems related to English-Tamil Translation

iii) Ganesan, Marappa (Annamalai Univ, Annamalainagar, India)

Tamil Corpus Generation and Text Analysis & Unsupervised Approach to Tamil Morpheme Segmentation



12.30 - 13.30

Lunch Break


Time

Program
13.30 - 15.00

Chair:

E. Iniya Nehru

Session A7: Computational Linguistics

i) David Prabhakar, P (Madras Christian College, Chennai, India)

Computer Analysis of Tamil Verb Forms

ii) Rajendran, Sankaravelayudam (Tamil University, Tanjore, India)

Dravidian Wordnet

iii) BalaSundaraRaman L, Ishwar S, Bangalore, India

Context-free grammar for Ezutthadhigaaram of the Tolkāppiyam



13.30 - 15.00

Chair:

Jean-Luc Chevillard


Session B7: Online Databases

i) Subashini Tremmel (Hewlett-Packard, Boeblingen, Germany)

மின்பதிப்பின் ஒருங்கிணைப்பு - ஓலைச்சுவடிகளின் பேரட்டவணை, பல்லூடக தகவல் தரவுக் களஞ்சிய உருவாக்கல்

ii) Anto Peter Ramesh (Softview Computers, Chennai, India)

கலைச் சொற்களை வளப்படுத்துங்கள்

iii) Kaliannan Umaraj (Central Institute of Tamil, Chennai , India)

சங்க இலக்கியத்திற்கான மின் அகராதி தயாரித்தல்



15.00 - 15.30

Coffee Break


15.30 - 17.00

Chair:

M. Ganesan

Session A8: Morphology and Tagger

i) Achutan Menon et al. (Leiden, Netherlands & Amrita Univ, Coimbatore, India)

Amrita Morph Analyzer and Generator for Tamil : a rule based approach

ii) Anand Kumar, M (Amrita Univ, Coimbatore, India)

A novel approach to Morphological Analysis of Tamil

iii) Dhanalakshmi, V (Amrita Univ, Coimbatore, India)

POS Tagger and chunker for Tamil Language



15.30 - 17.00

Chair:

Balasundara Raman

Session B8: Open source keyboard interface, Unicode font in Mac OS & Dictionary Database

i) A. G. Ramakrishnan: பன்மொழி வாயில் : An Open Source Multilingual Indic Keyboard Interface

ii) Muthu Nedumaran: Building Tamil Unicode Fonts for Mac OS X

iii) Harold F. Schiffman: & Vasu Renganathan The English Dictionary of Tamil Verbs: What can we learn about structure of Tamil from Electronic Databases?



17.00 - 18.00

Closing Session

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலல்-சூரசம்ஹாரம்

திருச்செந்தூர், அக். 23: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடி சுவாமியை தரிசித்தனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 18-ம் தேதி தொடங்கியது.

தினமும் காலையும், இரவும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மாலையில் திருவாவடு துறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவில் தங்கரத கிரி வீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. மூலவர் சுப்பிரமணியர் வைரக்கீரிடம், தங்க கவசம் அணிந்து, வேலும், கொலுசாயுதமும் தாங்கி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உச்சிகால தீபாராதனை, யாகசாலை மகா பூர்ணாகுதி நடைபெற்றது.

பின்னர், யாகசாலையிலிருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் வீரவாள் வகுப்பு, வேல்வகுப்பு பாடல்கள் பாட, மேளவாத்தியங்கள் முழங்க பிற்பகல் 2 மணிக்கு சண்முகவிலாசம் சேர்ந்து அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதன்பின் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்த்திற்கு சுவாமி எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைக்குப் பின், தங்க மயில் வாகனத்தில் புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு சூரனை வதம் செய்ய கடற்கரைக்கு எழுந்தருளினார்.

மாலை 5.25 மணிக்கு முதலில் யானை முக சூரனையும், பின்னர் சிங்க முக சூரனையும், அதனைத் தொடர்ந்து பத்மா சூரனையும் சுவாமி வதம் செய்தார். இறுதியில் சூரபத்மனை மறக்கருணையால் தன்னுடல் வேலாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார்.

தொடர்ந்து கடற்கரை சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீன மடத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நடிகை குஷ்பு வழக்கு- ரத்து

மதுரை, அக். 23: சுவாமி படங்களை அவமதித்தாக நடிகை குஷ்பு மீது பழனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
"வல்லமை தாராயோ' படத் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட நடிகை குஷ்பு, முப்பெரும் தேவியர் உருவப் படங்கள் முன் காலில் செருப்பு அணிந்து சுவாமியை அவமதிக்கும் வகையில் மேடையில் அமர்திருந்ததாக புகார் எழுந்தது.
அவரது செயல் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவது போல் உள்ளது. எனவே, அவர் மீது இந்துமத அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இந்து மக்கள் கட்சி திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், பழனி நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள சட்டவிதிகள்படி சுவாமியை அவமதித்ததற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. சுவாமியை அவமதிக்கும் நோக்கமும் குஷ்புவுக்கு இல்லை.
எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குஷ்பு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ராஜ இளங்கோ முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பழனி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஜிடெக்ஸ்

துபாய்: துபாயில்
ஜிடெக்ஸ்
என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ச‌ர்வ‌தேச‌ அள‌விலான‌ க‌ணினிக் க‌ண்காட்சி அக்டோப‌ர் 18 முதல் 22 வ‌ரை ந‌டைபெற்ற‌து.

இக்க‌ண்காட்சியில் ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌ முன்ன‌ணி நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ல்வேறு ச‌லுகைக‌ளுட‌ன் த‌ங்க‌ள‌து நிறுவ‌ன‌ மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை போட்டி போட்டுக்கொண்டு விற்ப‌னை செய்த‌ன‌.

29 ஆவ‌து வ‌ருட‌மாக‌ ந‌டைபெறும் இக்க‌ண்காட்சியில் ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

ஆதவன்

தீபாவளிக்கு வெளியான ஆதவன் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, படத்தில் இடம் பெற்ற மற்ற காட்சிகளை விட வடிவேலு காமெடியைத்தான் வெகுவாக ரசித்து சிரித்தாராம்.

இதைப் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

ஆதவன் படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. மொத்தம் 516 தியேட்டர்களில் வெளியிட்டோம். என்எஸ்ஸி ஏரியாவில் மட்டும் ரூ.1 கோடியைத் தாண்டிவிட்டது படத்தின் வசூல்.

படத்தை தமிழக முதல்வர் கலைஞர் பார்த்துவிட்டு, நல்ல ஜனரஞ்சகமான படம் என்று பாராட்டினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்த்தார். அவருக்குப் படத்திலேயே வடிவேலு காமெடிதான் பிடித்திருந்தது. வடிவேலுவின் காமெடி அருமையாக இருந்ததாகவும், சந்திரமுகிக்குப் பிறகு இந்தப் படத்தில் வடிவேலு தூள் கிளப்பியிருப்பதாகவும் கூறிப் பாராட்டினார்.

கூடவே, எனக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்" என்றார் உதயநிதி.
Tags: rajini, enjoys, aadhavan, vadivelu, surya, karunanidhi, ரஜினி, சூர்யா, ஆதவன், படம் பார்த்தார், பாராட்டு, வடிவேலு.

சிறப்பாக நடித்ததற்காக - விருதுகள்

டெல்லி: 2007-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை பிரகாஷ் ராஜுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் வழங்கினார்.

காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

55-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி அறிவிக்கப்பட்டன. தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக 'காஞ்சிவரம்' தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், அகில இந்திய அளவில் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டார்.

இந்த விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லி விஞ்ஞான் பவன் கட்டிடத்தில் நடந்தது. குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 'காஞ்சிவரம்' படத்துக்கான விருதை அதன் தயாரிப்பாளர் சைலேந்திர சிங் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோர் பெற்றனர்.

அந்த படத்தில் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி பிரதீபா பட்டீலிடமிருந்து பலத்த கரவொலிக்கிடையே பெற்றார்.

தேசிய அளவிஸல் இரண்டாவது முறையாக விருது பெறுகிறார் பிரகாஷ் ராஜ். ஏற்கனவே, 'இருவர்' படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருதை அவர் பெற்றுள்ளார்.

உமாஸ்ரீ..

சிறந்த நடிகைக்கான தேசிய விருது, கன்னட நடிகை உமாஸ்ரீக்கு வழங்கப்பட்டது.

தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்கு படமாக ஷாருக்கான் நடித்த 'சக் தே இந்தியா' இந்தி திரைப்படம் தேர்வு பெற்றிருந்தது. அந்த விருதை படத்தின் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மற்றும் இயக்குனர் சிமித் அமின் ஆகியோர் பெற்றனர்.

சிறந்த இயக்குனருக்கான விருதை பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணனுக்கு வழங்கினார் பிரதிபா பட்டீல். தமிழில் சிறந்த படமான 'பெரியார்' படத்துக்கும் விருது வழங்கப்பட்டது.

மன்னா டே-க்கு தாதா சாகேப் பால்கே விருது...

பிரபல இந்துஸ்தானி மற்றும் இந்தி பாடகர் மன்னா டே, 'தாதா சாகிப் பால்கே' விருதைப் பெற்றார். அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்க பரிசு, தங்கத் தாமரை மற்றும் சால்வை வழங்கப்பட்டது.

அவருக்கு விருது வழங்கும்போது, 'மன்னா டே, ஒரு மிகச் சிறந்த பாடகர்' என்று பிரதீபா பட்டீல் பாராட்டினார்.

சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சங்கர் மகாதேவனும், பாடகிக்கான விருதை ஸ்ரேயா கோஷலும் பெற்றனர்.

நேற்றைய விழாவில் மொத்தம் 53 விருதுகள் வழங்கப்பட்டன.

Thursday, October 22, 2009

22
Oct
தினமலரின் தவறு




மேற்காணும் இந்த படம் "தினமலர்" பத்திரிகையில் இன்று (oct-22-2009) வெளிவந்தது. இதில் "ஆந்திர முதல்வர் ராஜ சேகர ரெட்டியை" அமெரிக்க தூதர் சந்தித்ததாக போட்டிருக்கிருக்கிறார்கள். நீங்கள் குழம்புவதை போலவே நானும் குழம்பி போனேன், ராஜ சேகர ரெட்டி இறந்து மாதகணக்கில் ஆகிறது இந்த நேரத்தில் எப்படி...? மேலும் படத்தில் இருப்பது தற்போதைய முதல்வர் ரோசையா அவர்களே. இப்படி இவர்கள் தவறு செய்தால் யாரும் கேட்க கூடாது..ஆனால் ....நமக்கெதுக்கு வம்பு.

Posted by APSARAVANAN Thanks to tamilish.